OPPO K12x 5G ஹேண்ட்ஸ்-ஆன் ரிவ்யூ: பட்ஜெட் பிரிவில் ட்யூரபிலிட்டியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது!

மலிவு விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன்களின் சொர்க்கமாக இந்தியா மாறியுள்ளது. ரூ.15,000 க்குள் என்கிற பிரிவிலான ஸ்மார்ட்போன் சந்தையானது இந்தியாவின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பிரிவாகும். பல பிராண்டுகள் ஆதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன. இப்படியான போட்டி மிகுந்த சந்தையில், பெரும்பாலான பிராண்டுகள் விலைக்கு ஏற்ற சிறந்த அம்சங்களை வழங்கி, வழக்கமான வியாபார சூத்திரத்தையே பின்பற்றுகின்றன. ஆனால் பல நேரங்களில் இந்த அம்சங்கள் உடையக்கூடிய வெளிப்புறத்தினால் காணாமல் போய்விடுகின்றன, வெளிப்புறமும் கடினமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் பட்ஜெட் தன்மை காரணமாக பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை -இப்போது வரை!
சமீபத்தில் இந்தியாவில், OPPO நிறுவனம் அதன் மலிவு விலை கே சீரிஸின் கீழ் புதிய மதிப்பு கூட்டப்பட்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அது OPPO K12x 5G ஸ்மாட்போனாகும். இது அதன் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு, இராணுவ தரத்திலான ஆயுள், மென்மையான டிஸ்பிளே, பெரிய பேட்டரி, அதிவிரைவு சார்ஜிங், சக்திவாய்ந்த சிப் மற்றும் பல்துறை கேமராக்கள் ஆகியவற்ற்றை பயன்படுத்தி இந்தியாவின் மலிவு விலை 5ஜி பிரிவை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OPPO K12x 5G ஸ்மார்ட்போன் ஆனது எவ்வாறு தோற்றம், நீடித்துழைக்கும் தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்ற்றின் கலவையால் உருவான ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் என்கிற முடிவுக்கு நாங்கள் வந்தோம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்!

இந்த பிரிவில் நேர்த்தியான மற்றும் கடினமான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறோம்!
பிளாட் ஆன டிஸ்பிளே மற்றும் வட்டமான பக்கங்களுடன், OPPO K12x 5G அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாக இருப்பதை கண்டோம். மிட்நைட் வயலட் மற்றும் ப்ரீஸ் ப்ளூ ஆகிய இரண்டு அழகான கலர்களில் இந்த போன் வருகிறது. எங்களுக்கு ப்ரீஸ் ப்ளூ கலர் வேரியண்ட் கிடைத்தது. இது ஃபிங்கர் மற்றும் சமட்ஜ்-ஃப்ரூப் மேட் பினிஷ் உள்ளது, அதே நேரத்தில் இதன் 'காந்த துகள் வடிவமைப்பு' ஒரு அழகான பளபளப்பை வெளிப்படுத்துகிறது. கண்ணைக் கவரும் இந்த பினிஷை புறக்கணிக்க கடினமாக உள்ளது. கூடுதலாக, K12x 5G ஸ்மார்ட்போன் ஆனது மெலிதான மற்றும் லேசான வடிவ காரணியை கொண்டுள்ளது, 7.68 மிமீ மெல்லியதாகவும் 186 கிராம் எடையுடனும் உள்ளது.
அமைதியான வடிவமைப்பு ஒருபுறம் இருக்க, OPPO K12x 5G ஆனது அதன் 360-டிகிரி டேமேஜ்-ப்ரூஃப் ஆர்மர் பாடியுடன் ஒரு டேங்க் போல் பில்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய கூறுகளில் ஷாக் அப்சார்ப்ஷன் ஃபோம் மற்றும் OPPO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஹை-ஸ்ட்ரெங்த் அலாய் ஃபிரேம் ஆகியவைகள் உள்ளன, இவைகள் தாக்கங்களுக்கு உறுதியான எதிர்ப்பை வழங்க ஒன்றிணைகின்றன. OPPO நிறுவனமானது தற்செயலான டிராப்களுக்கு எதிராக குஷனிங் அடுக்கை வழங்குவதற்கு ஒவ்வொரு பாகத்திற்கும் போதுமான இடைவெளிகளை விட்டுச்சென்றுள்ளது.

இருப்பினும் உண்மையான ஸ்டார் K12x 5G உடன் பாக்ஸில் சேர்க்கப்பட்டுள்ள 'ஆன்டி டிராப் ஷீல்ட்' கேஸ் தான். இது ஷாக் மற்றும் டிராப் ரெசிஸ்டன்ஸ் இரண்டையும் வழங்குவதற்காக, கேஸ் ஒரு வலுவூட்டப்பட்ட பின் ஷெல் மற்றும் மூலையில் குஷனிங்கை கொண்டுள்ளது. இந்த கேஸை நாங்கள் சோதனை செய்தோம், இதன்கீழ் தற்செயலாக ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து பளிங்கு தரையில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக, இந்த மொபைல் போன் சேதமடையாமல் இருப்பதைக் கண்டோம். குறிப்பாக OPPO K12x 5G ஆனது நம்பகத்தன்மை மற்றும் ஆயுள் ஆகியவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலும் இந்த பல வருடங்களுக்குத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதவும் ரெசிஸ்டன்ஸ்க்கான அதன் மிலிட்டரி ஸ்டாண்டர்ட் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போன் கடினமாக இருப்பதை உறுதி செய்கிறது.OPPO K12x 5G எந்த சேதமும் ஏற்படாது என்பதைப் பரிந்துரைக்கிறோம்.
இந்த போனின் முன்பகுதிக்குச் செல்வோம். அதாவது இந்த போனின டிஸ்ப்ளே ஒரு முக்கியமான அம்சத்துடன் வருகிறது. அதாவது ஷவரில் இருந்தால் கூட ஒரு முக்கியமான விஷயத்தை இந்த போன் மூலம் எழுதி அனுப்ப முடியும். அதாவது அந்த அளவுக்குப் பாதுகாப்பு வசதியைக் கொடுக்கிறது இந்த மொபைல். ஸ்பிளாஸ் டச் என்று அழைக்கப்படும் அம்சத்துடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஈரமான கைகளுடன் டிஸ்பிளேவை பயன்படுத்த அனுமதிக்கிறது இந்த போன். இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 மதிப்பீட்டுடன் வருகிறது இந்த சாதனம். மேலும் OPPO K12x 5G போனின் டிஸ்பிளேவில் கீறல்கள் மற்றும் பஞ்சர்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க டூயல் டெம்பர்டு பாண்டா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

நீடித்திருக்கும் சக்தி, வியக்க வைக்கும் வேகம்
OPPO K12x 5G க்குள் மிகப்பெரிய 5100எம்ஏச் பேட்டரி வசதி உள்ளது. இது வியக்க வைக்கும் சக்தி, வேகம் போன்ற கொடுக்கிறது. அதாவது இது ஒரு நாள் முழுவதும் பேட்டரி ஆயுள், இரண்டாவது நாளுக்கு சிறிது நேரம் பேக்கப் கொடுக்கும் வகையில் உள்ளது. சிங்கிள் சார்ஜில் இந்த மிகப்பெரிய பேட்டரி மூலம் OPPO K12x 5G ஆனது 15.77 மணிநேர யூட்யூப் வீடியோ பிளேபேக் அல்லது 9.31 மணிநேர ஆடியோ பிளேக் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அற்பமான 18 வாட்ஸ் அல்லது 33 வாட்ஸ் வழங்கும் போன்களை போல் இல்லாமல், OPPO K12x 5G ஆனது 45 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் ஃபிளாஷ் சார்ஜை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த 45 வாட்ஸ் அடாப்டர் பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் K12x 5G போனை 0 முதல் 100 சதவீதம் வரை வெறும் 74 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். இது மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
மற்ற மொபைல் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், OPPO நிறுவனம் கடந்த நான்கு வருடங்களில் உகந்த பேட்டரி செயல்திறனை உறுதிசெய்து வருகிறது. ஒப்போ சுமார் 1,600 சார்ஜ் சுழற்சிகளுக்குப் பிறகு அதன் அசல் திறனில் 80% சதவீதத்திற்கும் மேல் பராமரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஒப்போ போன்களில் திறமையான மற்றும் நிலையான சார்ஜிங்கை உறுதிப்படுத்த, OPPO நிறுவனம் அதன் OPPO K12x 5G இல் பல ஹார்ட்வேர் அடிப்படையிலான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கூடுதலாக, OPPO இன் ஸ்மார்ட் சார்ஜிங் அம்சமானது, உங்கள் போன் சார்ஜ் செய்யும் போது அதன் வெப்பநிலைக்கும் பொருந்தும் வகையில் சார்ஜிங் செயல்முறையை மாற்றி அமைக்கிறது. இது மூலம் உங்கள் பேட்டரியின் ஆயுளை ஒப்போ நீட்டிக்க செய்துள்ளது. அதே வேளையில் ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதையும் உறுதி செய்துள்ளது.

ஒரு ஆல்-ரவுண்ட் என்டர்டெய்னர்
பிரமிக்க வைக்கும் விஸுவல் மற்றும் ஸ்மூத்தா நேவிகேஷன் அனுபவங்களை அனுபவிக்க கட்டாயம் உங்களுக்கு இந்த OPPO K12x 5G தேவை. மொபைலின் முன்பகுதிக்கு நகரும் போது, இது ஸ்லிம்மான பெசல்களுடன் (89.9% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவுடன்) 6.67" இன்ச் டிஸ்பிளேவால் உங்களை இந்த பிரமாண்டமான போன் வரவேற்கிறது. இது உங்களுக்கு அதிகபட்ச டிஸ்பிளே ரியல் எஸ்டேட்டை வழங்குகிறது. இந்த டிஸ்பிளே மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இது நேரடி சூரிய ஒளியில் கூட எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், இதில் 1000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பெஸ்ட் இந்த செக்மென்ட்டாக அமைந்துள்ளது.
மிரளவைக்கும் பெர்பார்மென்ஸ் உடன் இந்த ஒப்போ போன் உங்களை திகைப்படைய செய்கிறது. இந்த OPPO K12x 5G ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிடிய 6300 5ஜி சிப்செட் உடன் 8ஜிபி ரேம் வரை இணைகிறது. இந்த மீடியாடெக் சிப்செட், நீங்கள் பயன்படுத்தும் பல மல்டிடாஸ்கிங் பணிகளை அழகாகக் கையாளும் திறன் கொண்டது மற்றும் தினசரி பணிகளை விரைவாகச் செய்யும் திறனை கொண்டுள்ளது. OPPO K12x 5G இல் மல்டிடாஸ்கிங் பணிகளை கையாள்வது தென்றலை போல மெருதுவானதாக இருக்கும்.

ஒப்போவின் ரேம் விரிவாக்க அம்சம், மல்டிடாஸ்கிங் செயல்திறனை மேலும் மேம்படுத்த, 8ஜிபி வரையிலான பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜ்ஜை விர்ச்சுவல் ரேமாக பயன்படுத்த அனுமதிக்கிறது. வாழ்க்கையை இன்னும் எளிதாக்க, ஒப்போவின் டிரினிட்டி எஞ்சின் திரைக்குப் பின்னால் இயங்கி சிஸ்டம் ரன்னை சீராகவும், நிலையானகவும் இயக்கி, சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. நீங்கள் ஒரு மொபைல் கேமர்ராக இருந்தால், OPPO K12x 5G ஸ்மார்ட்போன் உங்களுக்கு லேக் இல்லாத கேமிங் அனுபவத்தையும் உறுதியளிக்கிறது.
ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், OPPO அதன் சமீபத்திய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனை 256ஜிபி வரையிலான விரைவான யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ்ஜுடன் தயாரித்துள்ளது. பெரும்பாலான ஓஇஎம்-கள் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டைத் தவிர்த்துவிட்டாலும், ஒப்போ நிறுவனம் அதன் போனில் 1டிபி எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது. OPPO K12x 5G ஸ்மார்ட்போன் OPPO லேப்ஸ் இன் 50 மாத சரளமான சோதனையில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த போனை நிறுவனம் நீண்ட கால பயன்பாட்டில் சோதனை செய்த பிறகும் இது மென்மையாகவும் வேகமாகவும் இருப்பதை ஒப்போ உறுதி செய்துள்ளது.
இணைப்புத்திறன் என்பது மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அம்சமாகவே இருக்கிறது. ஆனால், OPPO K12x 5G இல் அப்படி இல்லை. ஒப்போ நிறுவனம் ஏஐ லிங்க்பூஸ்ட் அம்சத்தை K12x 5G இல் ஒரு மென்மையான மற்றும் நிலையான அனுபவத்திற்காக வழங்கியுள்ளது. இந்த ஏஐ இன் சில நன்மைகள் இங்கே லிங்க்பூஸ்ட்:
* மால்கள் மற்றும் பேஸ்மெண்ட் போன்ற பலவீனமான வை-பை சிக்னல்கள் உள்ள பகுதிகளில், ஏஐ லிங்க்பூஸ்ட் ஆனது வை-பை இலிருந்து செல்லுலாருக்கு மாறுவதற்கான வேகத்தை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் டிஎஸ்டிஏ டூயல் கார்டு டூயல்-ஸ்டாண்ட்பை ஆனது இரண்டு சிம் கார்டுகளிலும் ஒரே நேரத்தில் கால்கள் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டை அனுமதிக்கிறது.
* ஏஐ லிங்க்பூஸ்ட்-ஐப் பயன்படுத்தி பலவீனமான நெட்வொர்க்குகளுடன் கூடிய கான்சர்ட்கள் மற்றும் ஃபெஸ்டிவல்கள் போன்ற நெரிசலான இடங்களிலும் கூட நீங்கள் போட்டோக்களை வேகமாகவும் மிகவும் நம்பகத்தன்மையுடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
* இறுதியாக, அதிக ட்ராஃபிக் அல்லது நகர மையங்களில் துல்லியமான லோகேஷன் அப்டேட்களையும் இது செயல்படுத்துகிறது, நீங்கள் ஒருபோதும் தொலைந்து போவதில்லை என்பதை உறுதி செய்கிறது.

ஏஐ எட்ஜ் உடன் அல்ட்ரா-கிளியர் போட்டோகிராபி அனுபவம்
கேமராக்களை பொறுத்தவரை, OPPO K12x 5G ஆனது ஃஎப்/1.8 அபெர்ச்சர் மற்றும் ஏஃஎப் மற்றும் 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸுடன் 32எம்பி அல்ட்ரா-கிளியர் ப்ரைமரி சென்சார் ஒன்றை தேர்ந்தெடுந்துள்ளது. முன்பக்கத்தில், 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. மெயின் கேமரா ஓப்போவின் எச்டிஆர் 3.0 அல்காரிதம் ஆனது கிரிப்ஸ் மற்றும் பகல் நேரத்தில் உயர்-ரெஸ் ஷாட்களை உறுதி செய்கிறது. ரியர் கேமரா அமைப்பு ஆனது ஏஐ போர்ட்ரெய்ட் ரீடச்சிங்கை ஆதரிக்கிறது, இது ஏஐ-ஐ பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் சரியான போர்ட்ராய்ட்களை பெறுகிறது.
2எம்பி சென்சார் சேர்வது பெரிதாக தெரியவில்லை என்றாலும், டெப்-ஆப்-பீல்டு எஃபெக்ட் மற்றும் துல்லியமாக சப்ஜெக்ட்டை பிரிக்க இது உதவுகிறது. பிறகு, டூயல்-வியூ வீடியோ உள்ளது, இது ரியர் மற்றும் முன் கேமராக்களில் இருந்து ஒரே நேரத்தில் காட்சிகளை பிடிக்க உங்களை அனுமதிக்கும் அம்சமாகும். இந்த அம்சம் விலாகர்களுக்கான கிளட்சில் வருகிறது, மேலும் ஈர்க்கக்கூடிய கன்டென்ட்டை உருவாக்க அனுமதிக்கிறது. OPPO K12x 5G இல் எடுக்கப்பட்ட சில மாதிரிகள் இங்கே உள்ளன.
மேலும் உள்ளது!
OPPO K12x 5G ஆனது ஆண்ட்ராய்டு 14 இல் சுத்தமான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய கலர்ஓஎஸ்14 ஸ்கின் டாப்பை கொண்டு இயங்குகிறது. ஓப்போ இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் மூன்று வருட வழக்கமான செக்யூரிட்டி பேட்ச்களை உறுதிசெய்கிறது, இது மலிவு விலை ஸ்மார்ட்ஃபோனை ஈர்க்கக்கூடியது. இந்த ஃபோன் ஒரு 'டர்போ டார்ச்' உடன் வருகிறது, இது நான்கு அட்ஜட்ஸ்டபிள் பிரைட்னஸ் செட்டிங்களை வழங்குகிறது. இறுதியாக, 300 சதவீச அல்ட்ரா வால்யூம் மோட் ஆனது சக்திவாய்ந்த ஒலியை வழங்குகிறது, அதே சமயம் ஆடியோவை குறைந்தபட்ச டிஸ்டர்ப்புடன் சீரான அனுபவத்திற்காக மேம்படுத்துகிறது.

OPPO K12x 5G பற்றிய இறுதி எண்ணங்கள்
முதல் பார்வையில், OPPO K12x 5G ஆனது அதன் அழகிய மின்னும் வடிவமைப்பு, சிறந்த ஆயுள் மற்றும் பவர்ஹவுஸ் விவரக்குறிப்புகளுடன் ஒரு அழகான பீஸ்ட்தான். இருப்பினும், கொஞ்சம் ஆழமாக தோண்டினால், இந்த ஸ்மார்ட்போன் நீண்ட காலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். OPPO K12x 5G இன் ஒவ்வொரு அம்சமும் இந்த நேரத்தில் மட்டும் ஈர்க்காமல், நீண்ட கால மொபைல் தீர்வை வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலுடன் நாங்கள் இருந்த காலத்தில், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது, OPPO K12x 5G இன் மதிப்பு அதன் விவரக்குறிப்பில் இல்லை, ஆனால் அதன் ப்ளூபிரிண்ட்டில் உள்ளது. ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களில் சமரசம் செய்யாமல் 15,000 ரூபாய்க்குள் மிகவும் வலுவான ஸ்மார்ட்போனை வழங்கும் ப்ளூபிரிண்ட் அது.

OPPO K12x 5G விலை, அவைலபிலிட்டி மற்றும் சலுகைகள்
இந்தியாவில் OPPO K12x 5G விலையானது, 6ஜிபி/128ஜிபி பேஸ் மாடலில் ரூ.12,999 முதல் தொடங்குகிறது, அதே சமயம் 8ஜிபி/256ஜிபி கான்பிகிரேஷன் உங்களுக்கு ரூ.15,999 உடன் வருகிறது. இந்த ஃபோன் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளது மற்றும் பிளிப்கார்ட், ஓப்போ ஈ-ஸ்டோர் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் வாங்கும் போது, நீங்கள் அடையக்கூடிய பல்வேறு சலுகைகளும் வருகின்றன.


Click it and Unblock the Notifications








