வச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல OIS கேமரா.. 6400mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பட்ஜெட் பிரியர்களை தட்டித் தூக்கும்படி ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மெயின் கேமரா, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 6400mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ஓப்போ கே12 பிளஸ் (OPPO K12 Plus) வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
ஓப்போ கே12 பிளஸ் அம்சங்கள் (OPPO K12 Plus Specifications): இந்த ஓப்போவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) பேக் செய்யப்பட்டுள்ளது.

மிட்-ரேஞ்ச் போன்களில் எதிர்பார்க்கப்படும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4 என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 720 ஜிபுயு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஓப்போ கே12 பிளஸ் போனில் 2 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. இந்த வேரியண்ட்களில் கூடுதலாக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம். ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓப்போ கே12 பிளஸ் போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆரா எல்இடி (Auro LED) வருகிறது. ஆகவே, போர்ட்ராய்டு மற்றும் நைட்போட்டோகிராபி பீச்சர்கள் கிடைக்கும்.
16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. மிட்-ரேஞ்ச் போன்களில் வரும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) போர்ட் வருகிறது. இந்த ஓப்போவில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. பேட்டரி சிஸ்டம் பக்கா பிரீமியம் மற்றும் பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது.
80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) மட்டுமல்லாமல், 6400mAh பேட்டரி வருகிறது. பெரிய பேட்டரி வருவதால், பேக்கப் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. பேட்டரியுடன் 193 கிராம் எடை வருகிறது. அதேபோல 8.37 எம்எம் தடிமன் கொண்டிருக்கிறது. 2 கலர்கள் இருக்கின்றன.
ஸ்னோவ் பீக் ஒயிட் (Snow Peak White) மற்றும் பாசால்ட் பிளாக் (Basalt Black) கலர்கள் இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களின் பேட்டரி மற்றும் கலர் விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட் வட்டாரங்களில் கசிந்தவை மட்டுமே. இந்த ஓப்போ கே12 பிளஸ் போன் அக்டோபர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சீனாவில் களமிறங்குகிறது. அதன்பின் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாகும். இந்த போனின் டிசைன் ஒன்பிளஸ் போனின் நோர்ட் சிஇ4 மாடலை போலவே இருக்கிறது. இருப்பினும், பேட்டரி பீச்சர்களில் மாற்றம் இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ரூ.20000 அல்லது ரூ.25000 பட்ஜெட்டில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








