வெளுத்து கட்டுது பட்ஜெட்.. ரூ.22610 போதும்.. SONY கேமரா.. 6400mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்பாடியான பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, 6400mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 1டிபி மெமரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ கே12 பிளஸ் (OPPO K12 Plus) போன் வெளியாகி இருக்கிறது. இந்திய பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள இந்த போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த ஓப்போ மாடலில் கூடுதல் பீச்சர்கள் பின்னிப்பெடல் எடுக்கின்றன. வெட் டச் கன்ட்ரோல் (Wet Touch Control), ஏஐ கால் சம்மரி (AI Call Summary), இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) மற்றும் ஆப்லைன் சாட் ஃபங்சன் (Offline Chat Function) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த பீச்சர்களுடன் வழக்கமாக பீச்சர்கள் பட்ஜெட்டைவிட கூடுதலாக கிடைக்கின்றன.

ஓப்போ கே12 பிளஸ் அம்சங்கள் (OPPO K12 Plus Specifications): இந்த ஓப்போ போனில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. வெட் டச் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், கேமிங் ஐ புரொடெக்சன் (Gaming Eye Protection) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4 என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 14.0 (ColorOS 14.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் அட்ரினோ 720 ஜிபுயு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓப்போ கே12 பிளஸ் போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. நைட் போட்டோகிராபிக்காக ஆரா எல்இடி உள்ளது.
ஷேக்-ப்ரீ அவுட்புட் கொடுக்க ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization) கிடைக்கிறது. மேலும், லைட் ஸ்பாட் போர்ட்ராய்டு (Light Spot Portrait), ஏஐ எரைசர் (AI Eraser), எமோஜி கட்அவுட் (Emoji Cutout) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஓப்போ கே12 பிளஸ் போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களும் வருகின்றன.
ஆகவே, எக்ஸ்-ஆக்சிஸ் கேமிங் மோட்டார் (X-axis Gaming Motor), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers) கிடைக்கிறது. பேட்டரி சிஸ்டமும் கேமிங் பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. 6400mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பிரீமியம் லுக்கில் 2 கலர்களில் கிடைக்க இருக்கிறது.
ஸ்னோவ் பீக் ஒயிட் (Snow Peak White) மற்றும் பிளாக் (Black) கலர்களி வருகிறது. இந்த ஓப்போ கே12 பிளஸ் போனின் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,610ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.24,990ஆகவும் இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications








