Home
Mobile

OPPO பாதி OnePlus பாதி! ஆனால், டிசைன் பட்டைய கிளப்புது! எந்த போன்?

ஓப்போ (OPPO) நிறுவனத்தின் ஓப்போ கே 11 (OPPO K11) போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன. இது ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் போன்களை போலவே அம்சங்களை கொண்டிருப்பதால், ஓப்போ, ஒன்பிளஸ் என இரண்டு பிராண்ட்களின் பிரியர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ கே 11 எக்ஸ் (OPPO K11X) போன் கடந்த மே மாதம் வெளியாகி விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் போன்களின் டிசைன்கள் முதல் அம்சங்கள் வரையில் பெரும்பாலானவை ஓப்போ கே 11 எக்ஸ் போனிலும் இடம்பெற்றதால், ஒன்பிளஸ் பிரியர்களையும், இந்த போன் கவர்ந்தது.

OPPO பாதி OnePlus பாதி! ஆனால், டிசைன் பட்டைய கிளப்புது!  எந்த போன்?

இப்போது, ஓப்போ கே 11 என்னும் புதிய மாடல் வெளியாக இருக்கிறது. இந்த போன் மிட்-ரேன்ஞ் விலையை விட சற்று கம்மியான விலையில் வெளியாக இருப்பதை சீனாவின் வெளியாகிவரும் செய்திகள் நமக்கு காட்டுகின்றன. இப்போது, இந்த போனின் சிப்செட், பேட்டரி, கேமரா குறித்த தகவல்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) என்னும் தளத்தில் வெளியாகி இருக்கின்றன.

ஓப்போ கே 11 போன் அம்சங்கள் (OPPO K11 Specifications): இந்த ஓப்போ போனின் அம்சங்கள் பல முறை ஊடகங்களில் கசிந்துள்ளது. அந்த அம்சங்களில் பெரும்பாலானவை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 (OnePlus Nord CE3) போனின் அம்சங்களுடன் ஒத்துப்போகிறது. அந்த வகையில், இந்த போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+)அமோலெட் (AMOELD) டிஸ்பிளே கொண்டுள்ளது.

அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782G 6என்எம் (Octa Core Snapdragon 782G 6nm) சிப்டெட் கொண்டிருக்கிறது. இதோடு அட்ரினோ 652எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஓப்போ போன்களில் பெரும்பாலும் இடம்பெறும் கலர்ஓஎஸ்13 (ColorOS 13) கூட வரலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் வேரியண்ட்களில் விற்பனை வர இருக்கிறது. டூயல் சிம் கார்ட் போர்ட் உள்ளது. ஐஎம்எக்ஸ்890 (IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இதோடு எல்இடி ப்ளாஷ் இடம்பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 80W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 போனை போலவே ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த போன் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO K11 Specifications Emerged With Snapdragon 782G, 120Hz OLED Display Here Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X