Home
Mobile

வேற சாய்ஸே வேணாம்.. ரூ.22,000 பட்ஜெட்.. 12ஜிபி ரேம்.. 512ஜிபி மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சோனி சென்சாருடன் கூடிய 50 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பிளாக்ஷிப் அம்சங்களுடன் ரூ.22,000 பட்ஜெட்டில் ஓப்போ கே 11 (OPPO K11) போன் களமிறங்குகிறது.

இந்த ஓப்போ போனின் மொத்த அம்சங்களையும் பார்த்தால், ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மிட்-ரேன்ஞ் போன்களில் இருப்பதை போலவே கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும்? மற்ற அம்சங்கள் எப்படி இருக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.22,000 பட்ஜெட்.. 12ஜிபி ரேம்.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஓப்போ கே 11 போன் அம்சங்கள்: இந்த போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் கலர்ஓஎஸ்13 (ColorOS 13) உடன் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் (Snapdragon 782G 6nm) சிப்டெட் வருகிறது.

அட்ரினோ 652எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்படலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனை வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 100W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதேபோல என்எஃபிசி (NFC), எக்ஸ்-ஆக்ஸிஸ் ஹெப்டிக் மேட்டார் (X-Axis Haptic Motor), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போன் மூன் ஷோடோ கிரே (Moon Shadow Gray) மற்றும் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஓப்போ கே 11 போன் வரும் ஜூலை 25ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.22,900ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K11 5G Specifications Locked With Snapdragon 782G, 12GB RAM Ahead July 25 Launch Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X