கில்லர்.. கில்லர்.. கேமரா கில்லர்.. ஆனா, பட்ஜெட் விலை.. சோனி சென்சார்.. 100W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த போன்?
எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொடுக்க முடியாத பட்ஜெட் விலையில், ஓப்போ (OPPO) நிறுவனத்தின் ஓப்போ கே 11 (OPPO K11) போன், சோனி சென்சாருடன் கூடிய கேமரா, 12ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி என்று பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த போனின் மொத்த அம்சங்களையும் பார்த்தால், சிறந்த கேமரா, பேட்டரி, செயல்திறன், டிஸ்பிளே என்று அனைத்தும் வியக்க வைக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை என்ன? கேமரா விரும்பிகள் இந்த போனை வாங்கலாமா? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

ஓப்போ கே 11 போன் அம்சங்கள் (OPPO K11 Specifications): இந்த ஓப்போ போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் (AMOELD) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் ஆக்டா - கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் (Octa - Core Snapdragon 782G 6nm) சிப்டெட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஓப்போ போன்களில் பெரும்பாலும் இடம்பெறும் கலர்ஓஎஸ்13 (ColorOS 13) கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அட்ரினோ 652எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டூயல் நானோ சிம் கார்ட் போர்ட் உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு எல்இடி ப்ளாஷ் லைடன் இடம் பெற்றுள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 100W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், என்எஃபிசி (NFC) கனெக்டிவிட்டி, எக்ஸ்-ஆக்ஸிஸ் ஹெப்டிக் மேட்டார் (X-Axis Haptic Motor), ஐஆர் பிளாஸ்டர், டூயல் ஸ்பீக்கர்கள் வருகின்றன. மீதமுள்ள அம்சங்கள் ஒன்பிளஸ் நோர்ட் 3 சிஇ லைட் போனில் வரும் அம்சங்களை ஒத்திருக்கின்றன.
இந்த போன் கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் மூன் ஷோடோ கிரே (Moon Shadow Gray) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஓப்போ கே 11 போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.22,900 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போனின் அம்சங்களை வைத்து பார்க்கையில், மிகப்பெரும் கேமரா செட்டப் கொண்டிருக்கும் பட்ஜெட் விலை போனாக இருக்கிறது.
வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது. முதலில் சீனாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








