Home
Mobile

50எம்பி கேமராவுடன் ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது ஒப்போ கே10 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இதுதவிர பல சிறப்பு சலுகைகள்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே10 ஸ்மார்ட்போனை ரூ.14,990-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரிவேரியண்டின் விலை ரூ.16,990-ஆக உள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும்மார்ச் 29-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுசெய்யப்பட்டவங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிரபல சிறப்பு சலுகைகள் உள்ளன.

ர்ட்போனில் 6.59-இன்ச்

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் எஃப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 2,412×1,080 பிக்சல் தீர்மானம், 20:1:9 என்றதிரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், Eye comfort mode உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கே10 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனின் பின்புறம்

புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி bokeh கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில்

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ,

புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OPPO K10 with 50MP primary camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X