ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் அறிமுகமான புதிய Oppo போன்: விலை எவ்வளவு தெரியுமா?
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஒப்போ K10 Vitality Edition
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ K10 Vitality Edition எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
எச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை விட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி இந்த புதிய ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.
மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் வீடியோக்களை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
புதிய ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனில் நீங்கள் நினைத்த ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளது. மீடியாடெக் சிப்செட்-ஐ விட ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதிக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி இந்த புதிய போன் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியைக்கொண்டுள்ளது.
மேலும் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் மாடல்.

நிறங்கள்
கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் தரமான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அட்டகாசமான கேமரா
ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா எனகிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.

சூப்பர் பேட்டரி
இந்த ஸமார்ட்போன் சிறந்த பேட்டரி பேக் அப் கொடுக்கும் என்றே கூறலாம். அதாவது ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
அதேபோல் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் ஆதரவுகளை கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளுடூத் 5.2 போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போன்.

ஒப்போ கே10 Vitality Edition விலை
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ கே10 Vitality Edition ஸ்மார்ட்போனின் விலை CNY 2,199(இந்திய மதிப்பில் ரூ.25,900) ஆக உள்ளது. இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி சேவை ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் ஒப்போ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. அதன்படி விரைவில் புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்களை நாம் எதிர்பார்க்கலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications