நாளை விற்பனைக்கு வரும் Oppo K10 5G.. நம்பி வாங்கலாமா..வேண்டாமா? என்னவெல்லாம் இருக்கு இதில்?

|

கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Oppo K10 5G ஸ்மார்ட்போன் நாளை முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதாவது, ஜூன் 15, 2022 ஆம் தேதி முதல் Oppo K10 5G ஸ்மார்ட்போன் அதன் விற்பனையைத் துவங்குகிறது. ஆரம்ப கால விற்பனையின் ஒரு பகுதி சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் தற்போது சிறப்பு விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. Oppo K10 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன? இந்த புதிய சாதனத்தை நம்பி வாங்கலாமா? இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ரூ. 20,000 விலைக்குள் பெஸ்ட் போன் வேண்டுமா?

ரூ. 20,000 விலைக்குள் பெஸ்ட் போன் வேண்டுமா?

சரி, முதலில் உங்களுடைய தேவை ரூ. 20,000 விலைக்குள் கிடைக்க கூடிய ஒரு பெஸ்டான ஸ்மார்ட் போனின் மீது உள்ளது என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியானால், நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளீர்கள். ரூ.20,000 விலைக்கும் குறைவான விலையில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனைத் தேடும் எவருக்கும் இது ஒரு பெஸ்ட் சாய்ஸ் சாதனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், இந்த சாதனத்தின் விலைக்கேற்ற பல அம்சங்களை இது கொண்டுள்ளது.

Oppo K10 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Oppo K10 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?

நீங்கள் ஆர்வமாக வாங்க துடிக்கும் இந்த புதிய Oppo K10 5G ஸ்மார்ட் போன் சாதனத்தின் விலை ரூ.17,499 மட்டுமே. இந்த விலை இப்போது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலான சிறப்பு விலையில், இந்த சாதனத்தை நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் அதை Axis வங்கி அல்லது SBI வங்கியின் டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கி பயன் பெறலாம். உங்களிடம் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி அட்டைகள் இருந்தால், உங்களுக்குக் கூடுதலாக சிறப்புத் தள்ளுபடியும் கிடைக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கீழ் ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றிய 5 டாப் கேட்ஜெட்ஸ் இதானா?ஸ்டீவ் ஜாப்ஸ் கீழ் ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றிய 5 டாப் கேட்ஜெட்ஸ் இதானா?

புதிய Oppo K10 5G மீது கிடைக்கும் சலுகை

புதிய Oppo K10 5G மீது கிடைக்கும் சலுகை

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றின் கார்டுகளைப் பயன்படுத்தி பயனர் வாங்கினால், அவர்களுக்கு ரூ.1,500 தள்ளுபடியைப் பெறத் தகுதியுடையவர் என்று Oppo தெரிவித்துள்ளது. இது ஒரு பிளாட் தள்ளுபடி என்பதனால் முழுமையாக ரூ.1,500 விலை குறைப்பை நீங்கள் பெற முடியும். இந்த தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கும் பச்சத்தில் புதிய Oppo K10 5G ஸ்மார்ட் போன் சாதனத்தை நீங்கள் வெறும் ரூ.15,999 என்ற விலையில் பெற்றிட முடியும்.

எங்கே.. எப்போது வாங்கலாம்?

எங்கே.. எப்போது வாங்கலாம்?

இத்துடன், பயனர்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI விருப்பமும் இந்த சாதனத்தின் மீது கிடைக்கிறது. Oppo K10 5G ஸ்மார்ட்போன் இப்போது ஓஷன் புளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்கக் கிடைக்கிறது. இந்த சாதனம் Flipkart மற்றும் Oppo ஆன்லைன் ஸ்டோர்கள் வெளியாக வாங்கக் கிடைக்கிறது. இதன் விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு சரியாகத் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் உங்கள் கேலண்டரில் இந்த நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள்.

27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

Oppo K10 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Oppo K10 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Oppo K10 5G ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 810 சிப்செட் உடன் இணைந்து 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏழு 5G பேண்டுகளின் ஆதரவுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதுவே சிறந்தது. பின்புறத்தில் 48MP முதன்மை சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பும் இதில் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு AI போர்ட்ரெய்ட் கொண்ட 8MP முன் சென்சார் உள்ளது.

Oppo K10 5G ஸ்மார்ட்போன் நம்பி வாங்கலாமா?

Oppo K10 5G ஸ்மார்ட்போன் நம்பி வாங்கலாமா?

Oppo K10 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 இன் அடிப்படையில் ColorOS 12 இல் இயங்குகிறது. இது 33W SUPERVOOCTM பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது. இதில் சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளது. சலுகைகள் உடன் வெறும் ரூ.15,999 விலையில் 5ஜி ஆதரவுடன் வாங்கக் கிடைக்கும் இந்த சாதனத்தை வாங்கலாமா என்றால், தாராளமாக வாங்கலாம். ஆனால் இறுதி முடிவு உங்களுடையது.

Best Mobiles in India

English summary
Oppo K10 5G Will Be Available At a Special Price From Tomorrow in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X