6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ கே1.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி ஒப்போ கே1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது ஒப்போ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4 -இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 2.5டி வளைந்த
கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 660:
இக்கருவி ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர் உடன் அட்ரினோ 512ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் மற்றும் 3600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
ஒப்போ கே1 ஸ்மார்ட்போனில் 25எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.20,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications