கட்டிங் எட்ஜ் கேமரா : இனி உங்கள் புகைப்பட ஸ்டைலே மாறும்.!

அசாத்தியமான மொபைல் கேமரா தொழில்நுட்பங்கள்.!

|

ஸ்மார்ட்போன்கள் படிப்படியாக ஓர் உயர் இறுதியில் சிறிய வகை கேமரா சாதனங்களாய் மாறிக் கொண்டிருக்கின்றன. பாக்கெட் அளவிலான இக்கருவிகளின் மூலம் எடுக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சி தரும் மற்றும் அற்புதமான புகைப்படங்களாக வெளிப்படுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அளவிற்கு புகைப்படங்களை கைப்பற்றும் நல்ல வளர்ச்சியை மொபைல் கேமராக்கள் அடைந்துள்ளன. அதில் இன்னும் சில தேவையான அதிநவீன கேமரா தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டதால் எப்படி இருக்கும்.? அதன் மூலமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்.?

அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியான ஸ்மார்ட்போன் புகைப்பட தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு அசாத்தியமான மொபைல் கேமரா தொழில்நுட்பம் தான் - கட்டிங் எட்ஜ் கேமரா டெக்னாலஜி.!

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

2012 ஆம் ஆண்டு வாக்கில் பயனர்கள் தங்களின் அழகான புகைப்படங்களை நண்பர்கள் உடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாய் இருப்பதை ஒப்போ நிறுவனம் உணர்ந்தது. அந்த சமயத்தில் சந்தையில் எந்த கருவியின் கேமராக்களும் பயனர்கள் எதிர்பார்க்கும் மிக அழகான புகைப்படங்களை உருவாக்கவும் திறனை கொண்டிருக்கவில்லை.

முதல் முறையாக

முதல் முறையாக

அந்த இடைவெளியை நிரப்ப மற்றும் பயனர்கள் முன் சந்தையில் பார்த்திராத அளவிலான 'அழகான புகைப்படங்களை வழங்கும் நோக்கத்துடன் முதல் முறையாக பியூடிப்பை மோட் கொண்ட ஒப்போ யூ701 ஸ்மார்ட்போன் கேமரா பேக் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கிருந்து ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பம் சார்ந்த திருப்புமுனை ஆரம்பிக்கிறது உடன் வேறு பிராண்டுகள் இதையே நிகழ்த்த ஒரு தூண்டுதலாய் அது அமைந்தது.

பிரத்யேகமான பதிப்பு

பிரத்யேகமான பதிப்பு

இப்போது, கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பியூட்டிப்பை மோட் என்பது ஒரு நிலையான அம்சமாகி விட்டது. எனினும் ஒப்போ தான் இன்றும் முன்னோடியாக அதாவது ஒரு மேம்பட்ட செயலாக்க வழிமுறைகள் கொண்ட 7 நிலைகள் கொண்ட ஒரு பிரத்யேக சமீபத்திய பதிப்பான பியூட்டிப்பை 4.0 கொண்டுள்ளது

கோல்டன் ஆங்கிள்

கோல்டன் ஆங்கிள்

மேலும் செல்பீ அனுபவத்தை அதிகரிக்க, 2012-ல் ஒப்போ அதன் முதல் 80 டிகிரி முன்பக்க ஸ்மார்ட்போன் கேமரா தொழிநுட்பமான 'கோல்டன் ஆங்கிள்' அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அம்சத்தின் கீழ் பயனர்களின் க்ரூப் செல்பீ அனுபவம் வேறொரு பரிமாணத்தை அடைந்தது மற்றும் நிறுவனம் அதோடு நிற்கவில்லை. செல்பீ பனோரமா அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.

உலகின் முதல் 206 டிகிரி

உலகின் முதல் 206 டிகிரி

இப்படியாக ஒப்போ அதன் ஒரு ஸ்மார்ட்போன் பின்புற கேமராவில் இன்னும் என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம் என்று 2013-ல் இருந்துபணியாற்ற தொடங்கியது. அதன் மூலமாக வெளியானது தான் ஒப்போ என்1 - உலகின் முதல் 206 டிகிரி சுழலும் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா கொண்ட கருவி புஜித்சூ ஐபிஎஸ் இமேஜிங் சிப், 6 துண்டு லென்ஸ் வடிவமைப்பு, சிமோஸ் (CMOS) சென்ஸார், இரட்டை முறை ப்ளாஷ் ஒளி என ஒரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேமரா ஸ்மார்ட்போனாக அது திகழ்ந்தது. பின்னர் 2014-ல் ஒப்போ என்3 வடிவமைப்பு மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அல்ட்ரா எச்டி

அல்ட்ரா எச்டி

பின்னர் மேலும் தரமான பின்புற கேமரா புகைப்படங்களுக்கான ஒப்போ 7 கருவியானது 13எம்பி பின்புற ஸ்னேப்பர் உடன் முன்னணி கேமரா தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கருவி 'அல்ட்ரா எச்டி' உதவியுடன் 50எம்பி தீர்மானம் படங்களை பதிவு செய்யும் உலகின் முதல் கைபேசியாக திகழ்ந்தது. இத்தகைய உயர் தீர்மானம் கேமரா கொண்டு மாபெரும் சுவரொட்டிகளை உருவாக்கக் கூடிய புகைப்படங்களையும் எடுக்கலாம்.

5எக்ஸ் இரட்டை கேமரா ஆப்டிகல் ஸூம்-மொபைல் கேமரா

5எக்ஸ் இரட்டை கேமரா ஆப்டிகல் ஸூம்-மொபைல் கேமரா

இப்படியாக பின்புற கேமராவில் பிரகாசமான எல்இடி ஒளிரும் விளக்குகள் கொண்ட 'ப்ளாஷ்' தொழில்நுட்பம் பின்னர் செல்பீக்களுக்கான பிளாஷ் ஆகியவைகளை இணைத்து இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் என்பதை ஒரு நிலையான அம்சமாக மாற்றியதோடு நில்லாமல் சமீபத்தில் 5எக்ஸ் இரட்டை கேமரா ஆப்டிகல் ஸூம்-மொபைல் கேமரா தொழில்நுட்பம் மூலமாகவும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ப்ரிஸ்ம்

ப்ரிஸ்ம்

உடன் உட்புகும் ஒளியை ப்ரிஸ்ம் மூலமாக திசை திருப்பும் வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட ஒரு 90 டிகிரி கோணத்தில் வைக்கப்படும் ஒரு பெரிஸ்கோப் கருவி பாணி அமைப்பை பயன்படுத்திய முதல் கருவியும் ஒப்போ தான். இந்த வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் மேலும் ஓஐஎஸ் (OIS) தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

40 சதவீதம்

40 சதவீதம்

இந்த புதிய ஆப்டிகல் மூலம் ஒப்போவின் முந்தைய கேமரா தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும் போது 40 சதவீதம் அதிக செயல்திறனை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது. உடன் இந்த 5 எக்ஸ் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மிக கூர்மையான மற்றும் மங்கற்ற புகைப்படங்களை பதிவு செய்ய உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அடுத்தது என்ன.?

அடுத்தது என்ன.?

ஒப்போ எப் 1 தொடர் ஆனது நிறுவனத்தின் செல்பீ கவனம் கொண்ட ஸ்மார்ட்போன்களின் தொடரில் மற்றொரு மாணிக்கமாகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஓப்ப்போ எப்1எஸ் அதன் சக்திவாய்ந்த 16எம்பி முன்பக்க கேமரா மூலம் அதன் போட்டியாளர்களை எளிமையாக தோற்கடிக்கிறது. இப்படியாக ஒப்போ நிறுவனம் கடந்து வந்த பாதைகளின் மூலமாக இப்போது ஒப்போ செல்பீ ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்படுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம்

கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம்

அப்படியான ஒப்போ நிறுவனத்தின் அடுத்த கருவியான ஒப்போ ஃபே பிளஸ் கருவியானது ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை அடுத்த எல்லைக்கே கொண்டு செல்லும் என்றும் அதில் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது அதில் என்னென்ன கேமரா தொழில்நுட்ப புரட்சிகள் அடங்கியதுள்ளது என்பதை அறிய மார்ச் 23-ம் தேதி நிகழும் அதன் வெளியீட்டு நிகழ்வில் தெரிய வரும். காத்திருப்போம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
OPPO is leading the smartphone photography with its cutting edge camera technology. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X