Home
Mobile

இந்திய ஆன்லைன் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ஒப்போ.!

ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பல புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான சூப்பர் ஸ்மார்ட்போன்களை கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம் செய்து வருகிறது.

ஒப்போ நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பல புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான சூப்பர் ஸ்மார்ட்போன்களை கடந்த சில ஆண்டுகளாக அறிமுகம் செய்து வருகிறது. ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு படைப்பிலும் சிறந்த செல்ஃபி கேமரா, கிரேடியன்ட் டிசைன், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் எனப் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஒப்போ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன், உலக முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாகச் சிறந்த டிஸ்பிளே, பாதுகாப்பு அம்சம் மற்றும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிநவீன பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்

அதிநவீன பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்

ஒப்போ நிறுவனம் தற்பொழுது இந்திய மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களுடைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய விரும்புகிறது. இந்திய சந்தையில் அதன் புதிய தொடர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தற்பொழுது தயாராக உள்ளது. ஒப்போ அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் முதன்மை அம்சங்களை வழங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களாக இருக்குமென்று ஒப்போ உறுதியளித்துள்ளது.

பட்ஜெட் விலையில்

பட்ஜெட் விலையில் "இன்-ஸ்கிரீன்" பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்

ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அதன் புத்தி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் "இன்-ஸ்கிரீன்" பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் சேவையை இணைத்துள்ளது. இன்-ஸ்கிரீன் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்துடன் கூடிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே சேவையை இணையில்லா காட்சி அனுபவத்திற்காக அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய சிறந்த தொழில்நுட்ப சேவையை பட்ஜெட் விலையில் வெறும் ரூ.20,000க்குள் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனத்தின் தனி சிறப்பு.

ஒன்லைன் விற்பனையில் புது சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையின் பெரிய சதவீதத்திற்கான பங்கு ஈ-கமெர்ஸ் தளங்களின் மூலமே கிடைக்கிறது. ஒப்போ நிறுவனம் செய்து வரும் ஆப்லைன் விற்பனையுடன் சேர்த்து ஒன்லைன் விற்பனையையும் துவங்க திட்டமிட்டதன் பிரதிபலிப்பாய் தற்பொழுது ஒப்போ நிறுவனம் அதன் புது சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியா சந்தையில் ஒன்லைன் விற்பனை மூலம் துவங்கவுள்ளது. இந்திய வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து ஒப்போ நிறுவனம் இந்த ஒன்லைன் விற்பனை சேவையை ஆப்லைன் சேவையுடன் இணைத்துச் செய்ய போவதாக அறிவித்துள்ளது.

சிறந்த சேவை வழங்கும் ஒப்போ

சிறந்த சேவை வழங்கும் ஒப்போ

குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்களை மட்டுமே இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஒப்போ நிறுவனம் விரும்புகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அணைத்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களும் வெறும் ரூ.20,000 க்குள் விற்பனைக்கு வந்ததென்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இந்திய வாடிக்கையாளர் மற்றும் ஈ-கமெர்ஸ் நிறுவனங்களின் நம்பிக்கையை ஒப்போ நிறுவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் விற்பனையில் ஒப்போ

ஒன்லைன் விற்பனையில் ஒப்போ

ஆப்லைன் விற்பனையில் தனக்கென்று தனியிடத்தை பிடித்துள்ள ஒப்போ நிறுவனம், தற்பொழுது ஒன்லைன் விற்பனையில் தனக்கென்ற ஒரு தனியிடத்தை பிடித்து, அதனைத் தக்க வைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது. ஒப்போ நிறுவனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய சந்தையில் தனது ஒன்லைன் விற்பனையை துவங்குமென்று அறிவித்துள்ளது. இத்துடன் கூடுதல் சலுகை, தள்ளுபடி, கேஷ் பேக் சலுகை மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆப்பர்கள் என அணைத்து சேவைகளையும் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO to introduce feature-packed new Smartphones in Indian-online market : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X