எல்லா லேட்டஸ்ட் போன்களும் ஓரம்போ.. 7000mAh பேட்டரி, இரண்டு 200MP கேமரா.. OPPO-வின் புது மினி போன்!
ஒப்போ (OPPO) நிறுவனம், ஒரு புதிய மினி ஸ்மார்ட்போனை, அதாவது காம்பாக்ட் பிளாக்ஷிப் (Compact Flagship) ஸ்மார்ட்போனை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி உள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) மாடலாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்செட்டால் இயக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிமென்சிட்டி 9500எஸ் ஆனது மேம்பட்ட 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட ஒரு பிளாக்ஷிப் மொபைல் சிப்செட் ஆகும். இது அனைத்து பெரிய கோர் சிபியு கட்டமைப்பையும் மேம்பட்ட ஆற்றல் திறனுடன் இணைக்கிறது. இது பிரீமியம் மற்றும் செயல்திறன் கோர்களுடன் கோர்டெக்ஸ்-எக்ஸ்925 அல்ட்ரா கோரையும கொண்டுள்ளது மற்றும் ரே டிரேசிங் ஆதரவுடன் உயர்நிலை கேமிங்கிற்காக இம்மார்டலிஸ்-ஜி925 ஜிபிபு உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிப், ஜெனரேட்டிவ் ஏஐ பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த என்பியு, 8கே டால்பி விஷன் ரெக்கார்டிங் உள்ளிட்ட மேம்பட்ட இமேஜிங் திறன்கள் மற்றும் ரிலீஸ்-17 5ஜி மற்றும் மேம்படுத்தப்பட்ட வைஃபை ரேன்ஞ் போன்ற அடுத்த தலைமுறை கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஒருங்கிணைக்கிறது.
எப்போது அறிமுகமாகும்? ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை தவிர, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய சந்தைகளிலும் இது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை வெளியான அறிக்கைகளின்படி, ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான 6.32-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது கலர்ஓஎஸ் 16-அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 16 கொண்டு இயங்கலாம்
கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 200எம்பி பிரைமரி கேமரா, 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் ஒரு 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம். கடைசியாக இது 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு (நவம்பர் 2025) இந்தியாவில், ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
12ஜிஜி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன ரூ.74,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆனால் சிறிய 7,025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி


Click it and Unblock the Notifications








