Home
Mobile

இதுக்கு மேல வேற என்ன வேணும்.. மூன்று 50MP கேமரா, 100W சார்ஜிங், 7025mAh பேட்டரி, 12GB ரேம்.. புது OPPO போன்!

ஒப்போ (Oppo) நிறுவனத்தின் பைண்ட் எக்ஸ்9 சீரீஸின் (Find X9 Series) கீழ் கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலொன்று அறிமுகம் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) ஸ்மார்ட்போன் ஆகும்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் இதே சீரீஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என்கிற 2 மாடல்கள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

மூன்று 50MP கேமரா, 7025mAh பேட்டரி, 12GB ரேம்.. புது OPPO போன்!

இதற்கிடையில் மீடியாடெக் நிறுவனம் ஆனது புதிய டைமன்சிட்டி 9500எஸ் சிப் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முதல் சில பிராண்டுகளில் - ஒப்போவும் இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில், மீடியாடெக் இந்தியாவின் சமீபத்திய பதிவில், புதிய டைமன்சிட்டி 9500எஸ் சிப் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆக ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

டைமன்சிட்டி 9500எஸ் சிப்செட் ஆனது ஆல்-பிக்-கோர் சிபியு டிசைனை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, இதில் 3.73GHz இல் இயங்கும் ஒரு கார்டெக்ஸ்-X925 கோர், 3.3GHz இல் இயங்கும் மூன்று கார்டெக்ஸ்-X4 கோர்கள் மற்றும் 2.4GHz இல் நான்கு கார்டெக்ஸ்-A720 கோர்கள் உள்ளன. கிராபிக்ஸை பொறுத்தவரை, இந்த சிப் 12-கோர் இம்மார்டலிஸ்-G925 ஜிபியு-வை ஒருங்கிணைக்கிறது, இது 1.61GHz வரை அதிக வேகத்தில் இயங்குகிறது.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனில் மூன்று 50எம்பி கேமராக்களை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதாவது ப்ரைமரி லென்ஸ், பெரிஸ்கோப்-ஸ்டைல் ​​டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஒரு அல்ட்ரா-வைட் கேமரா என எல்லாமே 50எம்பி ஆக இருக்கலாம்

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.59-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்; அதில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமராவும் இடம்பெறலாம். பேட்டரியை பொருத்தவாரி இது 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7025mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12GB ரேம் மற்றும் 256GB அல்லது 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

டிசைனை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சற்றே பெரிய, கிடைமட்டமாக சீரமைக்கப்பட்ட கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த செட்டப் - மூன்று கேமராக்களை ஒரு பக்கத்திலும், மறுபுறம் பிராண்டிங் மற்றும் ஃபிளாஷை வைத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆக இது சட்டென்று பார்ப்பதற்கு ஐபோன் 17 ப்ரோ மாடலை போலவே இருக்கலாம்.

குறிப்பிடத்தக்க வகையில், முன்னதாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம் என்கிற தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல் சீன சந்தைக்கானது என்பது போல் தெரிகிறது. அதாவது இது சீனாவில் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம். இதற்கு பதிலாக, ஒப்போ நிறுவனம் சீன சந்தைக்கான ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ (Oppo Find X9s Pro) மாடலில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, இது ஒரு காம்பாக்ட் ஸ்மார்ட்போன் (மினி ஸ்மார்ட்போன்) ஆக வரும். இது 6.3-இன்ச் OLED 1.5கே 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டிருக்கலாம். இது டைமன்சிட்டி 9500 சிப்பால் இயக்கப்படலாம். இது ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ (Oppo Find X9s Pro) மாடலுடன் சேர்த்து வருகிற 2026 மார்ச் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9s with Dimensity 9500s Chipset India launch confirmed What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X