Home
Mobile

விவோ சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க வரும் புதிய Oppo போன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனை வரும் 2026 மார்ச் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் அம்சங்கள் (Oppo Find X9s Specifications): 6.3-இன்ச் எல்டிபிஎஸ் ஒஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில்1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

விவோ சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க வரும் புதிய Oppo போன்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிளஸ் எஸ்ஒசி (MediaTek Dimensity 9500+ SoC) சிப்செட் உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தரமான கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

200எம்பி பிரைமரி கேமரா + 200எம்பி பெரிஸ்கோப் டெலி போட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும்.

அதேபோல் 7000mAh பேட்டரி உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விவோ எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக தான் இந்த ஒப்போ போன் வெளிவருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9s India launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X