Home
Mobile

வாங்குனா இந்த Oppo போன் வாங்கனும்.. 7020mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் அம்சங்கள் (Oppo Find X9s Specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில்1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

வாங்குனா இந்த Oppo போன் வாங்கனும்.. 7020mAh பேட்டரி.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் எஸ்ஒசி (Dimensity 9500s) சிப்செட் உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தரமான கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலி போட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனுக்கு IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்குனா இந்த Oppo போன் வாங்கனும்.. 7020mAh பேட்டரி.. எந்த மாடல்?

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும்.

7020mAh பேட்டரி உடன் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Find X9s full specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X