Home
Mobile

அடிச்சு புடிச்சு வாங்குவாங்களே.. Teleconverter Kit உடன் அறிமுகமான புதிய OPPO போன்.. எந்த மாடல்? என்ன விலை?

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Oppo Find X9 Series) மாடல்கள் இன்று (நவ.18) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சீரிஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) ஆகிய இரண்டு மாடல்கள் வெளியாகியுள்ளன

என்ன விலை? 12ஜிஜி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன ரூ.74,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஸ்பேஸ் பிளாக் (Space Black) மற்றும் டைட்டானியம் க்ரே (Titanium Grey) கலர்களில் வாங்க கிடைக்கும்.

Teleconverter Kit உடன் அறிமுகமான புதிய OPPO போன்!

மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மாடல் சில்க் ஒயிட் (Silk White) மற்றும் டைட்டானியம் சார்கோல் (Titanium Charcoal) என்கிற 2 கலர்களில் வாங்க கிடைக்கும்.

விற்பனையை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸின் 2 மாடல்களுமே வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் ஒப்போ இந்தியா ஸ்டோர் (Oppo India Store), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கும். ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ்9 மாடலுக்கான ஒப்போ ஹசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட்டையும் (Oppo Hasselblad Teleconverter Kit) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 29,999 ஆகும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- TUV ரெயின்லேண்ட் இன்டெலிஜெண்ட் ஐ கேர் 5.0 சர்டிபிகேட்

- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக் மோட்டார்
- 36,344.4 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)

- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 32,052.5 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆனால் சிறிய 7,025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 With Teleconverter Kit Oppo Find X9 Pro With 200MP Telephoto Launched in India Sale Nov 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X