தலைவன் இறங்கட்டுமே.. 7025mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP டெலிபோட்டோ.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 5ஜி (OPPO Find X8) மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இதனால், அடுத்த மாடலான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் இப்போது மார்கெட்டில் கசிந்துள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களாக ஃபைண்ட் எக்ஸ் சீரிஸ் (Find X Series) இருக்கின்றன. இந்தியாவிலும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ (OPPO Find X8 Pro) வெளியாகி இருக்கின்றன. ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கொண்ட மாடல்களாக இவை களமிறங்கின.

இதனால், கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் குளோபல் மார்கெட்டில் வெளியாகின. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.
இதற்கு முன்னதாகவே சீன மார்கெட்டில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. இதற்கு ஏற்ப இப்போது, அந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் கசிந்து வருகின்றன. எக்ஸ்பெர்ட்பிக் மூலமாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் முழு பீச்சர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ஏராளமான அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. பீச்சர்கள் எப்படி இருக்கின்றன.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அம்சங்கள் (OPPO Find X9 Specifications): ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைத்தது. ஆனால், இந்த ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் லுமோ இமேஜிங் டெக்னாலஜி (Lumo Imaging Technology) கூடுதலாக கிடைக்க இருக்கிறது. வழக்கமான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, சோனி எல்ஒய்டி 808 (SONY LYT 808) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. மேலும், சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சாம்சங் ஜேஎன்9 (Samsung JN9) பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது. டெலிபோட்டோ மற்றும் மெயின கேமராவில் ஓஐஎஸ் கிடைக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் அதில் சாம்சங் ஜேஎன்1 சென்சார் கிடைக்க இருக்கிறது. ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் மாடல்களில் கிடைத்ததை போலவே இதிலும் ஏஐ கேமரா பீச்சர்களை எதிர்பார்க்கலாம். கேமராவை போலவே பேட்டரியிலும் அப்கிரேட் கிடைக்கிறது. ஃபைண்ட் எக்ஸ்8 மாடலில் 5630mAh பேட்டரி வந்தது.
ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் 7,025mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9500 எஸ்ஓசி (MediaTek Dimensity 9500 SoC) கிடைக்க இருக்கிறது.
6.59 இன்ச் ஓஎல்இடி எல்டிபிஓ (OLED LTPO) டிஸ்பிளே வருகிறது. இந்த பிளாட் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வர இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வருகிறது. ஏஐ மற்றும் மல்டி மீடியா பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) வர இருக்கிறது.
மேலும், 3X ஆப்டிகல் ஜூமிங், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor), டைப்-சி ஆடியோ கிடைக்க இருக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் பிளஸ் கீ இடம்பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








