முழுசா ரூ.5,500 தள்ளுபடி.. 7025mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்யும்படியான தள்ளுபடி விலைக்கு ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7025mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளேவை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இப்போது, தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 74,999 ஆக இருக்கிறது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,500 தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.69,499 பட்ஜெட்டில் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அம்சங்கள் (OPPO Find X9 Specifications): ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
மேலும், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி808 (Sony LYT808) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
அல்ட்ரா வைடு கேமராவுக்கு சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதில் சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) சென்சார் கிடைக்கிறது. 3X சென்சார் ஜூமிங் கொடுக்கப்படும். இதிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 2 எம்பி மல்டி-ஸ்பெக்ட்ரல் லென்ஸ் உள்ளது.
இதுவொரு ஹசல்பிளாட் போர்ட்ராய்டு (Hasselblad Portrait) கேமரா மாடலாக இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த கேமரா கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் இந்த கேமராவுக்கு கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட 7025mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் மற்றும் 203 கிராம் எடை கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ /என்எஸ்ஏ (5G SA / NSA), வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. ஸ்பேஸ் பிளாக் (Space Black), வெல்வெட் ரெட் (Velvet Red), டைட்டானியம் கிரே (Titanium Grey) கலர்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








