OPPO முரட்டு பீஸ்.. 7025mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. புது Velvet Red எடிஷன்.. எந்த மாடல்?
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) ஸ்மார்ட்போனின் புதிய வெல்வெட் ரெட் எடிஷன் (Velvet Red Edition) களமிறங்கி இருக்கிறது. 7025mAh பேட்டரி, 80W சார்ஜிங், சோனி சென்சார் பிரைமரி கேமரா போன்ற பீச்சர்கள் வழக்கம்போல கிடைக்கின்றன. ஆனால், கலர் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த புதிய எடிஷன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் (Space Black) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் வெளியாகியது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.84,999ஆகவும் இருக்கிறது.

ரூ.7,499 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, புதிதாக வெல்வெட் ரெட் (Velvet Red) என்னும் புதிய கலர் வேரியண்ட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த கலர் வேரியண்ட்டின் விற்பனை டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆக இருக்கிறது.
பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.67,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆகவே, ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே இப்போதே விற்பனைக்கு கிடைக்கின்றன. வெல்வெட் ரெட் மட்டும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் கிடைக்க இருக்கிறது. மற்றபடி பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அம்சங்கள் (OPPO Find X9 Specifications): பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்டுள்ள ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) சிப்செட் கிடைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) இணைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், என்ஹான்ஸ் செய்யப்பட்ட டிரினிட்டி என்ஜின் (Trinity Engine), சிப்-லெவல் டைனாமிக் ஃபிரேம் சின்க் (Chip-Level Dynamic Frame Sync) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. ஆர்ம் ஜி1 அல்ட்ரா ஜிபியு கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்புடன் 6.59 இன்ச் 2760 × 1256 பிக்சல்கள் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.
இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் மற்றும் கண்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 3840Hz அல்ட்ரா-ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் மட்டுமே கிடைக்கிறது. எஸ்டி கார்டு சிலாட் கிடையாது.
சோனி எல்ஒய்டி808 (Sony LYT808) சென்சாருடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. ஹசல்பிளாட் போர்ட்ராய்டு (Hasselblad Portrait) அவுட்புட் கிடைக்கிறது. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கிடைக்கிறது.
மேலும், சோனி எல்ஒய்டி600 (Sony LYT600) சென்சாருடன் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. இதுபோக 2 மெகாபிக்சல் மல்டி-ஸ்பெக்ட்ரல் லென்ஸ் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா கிடைக்கிறது.
அண்டர் வாட்டரில் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி செய்து கொள்ளும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பெரிய 7025mAh பேட்டரியுடன் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் இணைக்கப்பட்டு இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கூடுதலாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








