Home
Mobile

சிகப்பு தங்கம்.. ரூ.7500 டிஸ்கவுண்ட்.. 7500mAh பேட்டரி புது OPPO 5ஜி போன்.. அடிச்சு புடிச்சு வாங்குறாங்க!

ஒப்போ (OPPO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமாகி, கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் ரெட் கலர் ஆப்ஷனும் விற்பனைக்கு வந்துள்ளது.

அது வெல்வெட் ரெட் கலர் ஆப்ஷன் ஆகும். 2025 நவம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த லிமிடெட் கலர் எடிஷன் ஆனது ஸ்டாண்டர்ட் மாடலில் உள்ள அதே அம்சங்களை பேக் செய்கிறது. அதாவது அதே பிரீமியம் ஹார்ட்வேர் அனுபவத்தை தக்கவைத்துக்கொண்டு, மிகவும் தனித்துவமான கலர் ஆப்ஷனை விரும்புவார்களா இலக்காக கொண்டுள்ளது.

ரூ.7500 டிஸ்கவுண்ட்.. 7500mAh பேட்டரி புது OPPO 5ஜி போன்!

என்ன விலை, என்னென்ன ஆபர்? ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் வெல்வெட் ரெட் கலர் ஆப்ஷன் ஆனது சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும்.. வெல்வெட் ரெட் வேரியண்டின் விலை ரூ.74,999 ஆகும். இது இப்போது ஒப்போ இந்தியா இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஆபர்களை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி சலுகைகளுடன், ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 வெல்வெட் ரெட் வேரியண்டை ரூ.67,499 க்கு வாங்கலாம், மேலும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கும். வெல்வெட் ரெட் கலர் அபிஷனின் கீழ் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.

மெங்கும் தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது 10 சதவீதம் வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும், 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் கிடக்கம். மேலும் கேஷிஃபை (Cashify) மற்றும் சர்விஃபை (Servify) மூலம் எக்ஸ்சேன்ஜ்போனஸையும் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி கூட்டாளர்கள் மூலமாக ஜீரோ டவுன் பேமண்ட் திட்டங்களையும் பெறலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஆனது 180 நாள் ஹார்ட்வேர் மாற்று கொள்கையுடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) அணுகலையும் பெறலாம். ரூ.649 மற்றும் அதற்கு மேற்பட்ட போஸ்ட்பெய்டு திட்டங்களில் உள்ள ஜியோ பயனர்கள் ரூ.2,250 மதிப்புள்ள நன்மைகள் கிடைக்கும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (வெல்வெட் ரெட்) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 32,052.5 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup)
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா

- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse Wireless Charging)
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- எஸ்ஜிஸ் டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட் (SGS Drop Resistance Certificate)

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 Velvet Red Color Option India Sale Started Check Out All Offers Discounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X