Home
Mobile

நேரம் குறிச்சாச்சு இதுக்கு.. OLED டிஸ்பிளே.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போனின் குளோபல் வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளன. ஓஎல்இடி டிஸ்பிளே, 200 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்ப இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டை தொடர்ந்து, குளோபல் மார்கெட்டிலும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டன. இப்போது, ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மீது இருக்கிறது. ஏற்கனவே பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தன.

நேரம் குறிச்சாச்சு இதுக்கு.. OLED டிஸ்பிளே.. 200MP கேமரா.. மாடல்?

இப்போது, குளோபல் வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளன. டெக் டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் அவரது எக்ஸ் தளத்தில் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய வெளியீடு உறுதியாகவில்லை. இருப்பினும், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9, எக்ஸ்9 ப்ரோ மாடல்கள் வெளியாகும்.

இந்த மாடல்களின் வரவேற்பு மற்றும் விற்பனையின் அடிப்படையில், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் தெரிய வரலாம். இந்தியாவில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9, ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல்கள் இந்த மாதத்தில் வெளியாக இருக்கின்றன. இதை ஓப்போ இந்தியா உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): குளோபல் வெளியீடு குறித்த விவரங்கள் கசிவதற்கு முன்னதாகவே, இந்த ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் கசிந்துவிட்டன. ஆகவே, இதில் 2K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது.

லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 6 (ColorOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. அதேபோல ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் வர இருக்கிறது.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்09இ (Sony IMX09E) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வர இருக்கிறது.

மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,33,600ஆக இருக்கிறது. இது குளோபல் வேரியண்ட்டின் விலையாக இருக்கிறது. இதே பட்ஜெட்டில் அல்ட்ரா மாடலும் வெளியாகலாம்.

ஆகவே, இந்தியாவில் வெளியானாலும், அல்ட்ரா பிரீமியம் விலைக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. சாம்சங் கேலக்ஸி எக்ஸ்26 அல்ட்ரா போன்ற பிரீமியம் மாடல்களுக்கு போட்டியாகவே இது களமிறக்கப்படுவது தெரிகிறது. ஏனென்றால், கேமரா பீச்சர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்தியாவில் கிடைக்குமா என்பதை குளோபல் வெளியீட்டுக்கு பிறகு பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Ultra With 7000mAh Battery Global Launch Tipped Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X