Home
Mobile

ரூ.17,000 டிஸ்கவுண்ட்.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. 7050mAh பேட்டரி.. பிரீமியம் OPPO போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 (Flipkart Big Billion Days 2026) என்னும் சிறப்பு விற்பனையில் நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதால், தனி வரவேற்பை பெற்றுள்ளது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,69,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.17,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.1,52,999 விலைக்கு வாங்கலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த ஓப்போ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

ரூ.17,000 டிஸ்கவுண்ட்.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. 7050mAh பேட்டரி!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் கிடைக்கிறது. குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 3என்எம் டெக்னாலஜியில் பில்ட் செய்யப்பட்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் வருகிறது. கிராபிக்ஸ் அவுட்புட் கொடுக்க அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 200 எம்பி 3X சூப்பர் போர்ட்ரெய்ட் டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி 10X ஆப்டிகல் டெலிபோட்டோ கேமரா என்று குவாட் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக இருக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் சோனி லைட்டியா 901 (Sony Lytia 901) சென்சார் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 200 எம்பி 3X டெலிபோட்டோ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி51ஏ (OmniVision OV52A) சென்சார் இடம்பெறுகிறது. மேலும், 50 எம்பி 10X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேஎன்எல் (Samsung JNL) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 120X டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. ஆகவே, லாங்-ஷாட் போட்டோகிராபி பிரீமியமாக இருக்கும். வீடியோ எடிட்டிங் மற்றும் ஹை-குவாலிட்டி வீடியோ ரெக்கார்டிங்களுக்கு ஏற்ற வகையில் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.2 எம்பி மோனோகுரோம் சென்சாரும் இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் இடம்பெறுகிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களை செய்து கொள்ள 50 எம்பி ஃப்ரன்ட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் இடம்பெறுகிறது. இந்த ஃபரன்ட் கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 7050mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இதை விரைவாக சார்ஜ் செய்ய 100W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வயர்லெஸ் சார்ஜிங் செய்ய 50W சப்போர்ட் வழங்கப்படுகிறது. இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor), IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Ultra With 12GB RAM Available At Rs 17000 Discount on Flipkart Big Billion Days 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X