ஒட்டுமொத்த மார்க்கெட்டும் வாய் பிளக்குது.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP கேமரா.. புது OPPO போன்!
ஒப்போ (Oppo) நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பேட்டரி பவர்ஹவுஸ் ஆக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது. அதாவது மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யலாம். அது 7000எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி ஆக இருக்கலாம். என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
நாம் இங்கே பேசுவது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஒரு சமீபத்திய லீக் - இது அதன் முன்னோடியை விட (அதாவது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா மாடலை விட) மிகப்பெரிய பேட்டரியுடன் வரும் என்றும், அதே நேரத்தில் பாஸ்ட் சார்ஜிங் வேகத்தை தக்க வைத்திருக்கும் என்றும், கூடவே ஒரு தீவிரமான கேமரா மேம்படுத்தலை பெறும் என்றும் கூறுகிறது.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6850mAh (ஒவ்வொன்றும் 3425mAh) என மதிப்பிடப்பட்ட டூயல் செல் அமைப்பை பயன்படுத்தும். ஆக இது 7000mAh என சந்தைப்படுத்தப்படலாம்.
இது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த வழக்கமான 6100mAh பேட்டரி உடன்ஒப்பிடும் போது நல்ல மேம்பாடு ஆகும். அது மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான மற்றும் விரைவில் வெளியாகவுள்ள பல பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்த மிகப்பெரிய பேட்டரிகளில் இதுவும் ஒன்றாகும்.
பேட்டரி திறனில் பெரிய ஏற்றம் செய்யும் மறுகையில், ஒப்போ நிறுவனம் இதில் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சேர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த லீக் ஆனது இந்த ஸ்மார்ட்போன் "பல்க்" ஆகாது என்பதையும் குறிக்கிறது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2கே பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16 உடன் வரலாம். நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி 68 / ஐபி 69 ரேட்டிங்கை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200எம்பி ப்ரைமரி சென்சார், 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வரை கொண்ட டூயல் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ்கள் (200எம்பி மற்றும் 50எம்பி) இடம்பெறலாம். செல்பீ கேமரா குறித்த விவரங்கள் இல்லை.
முன்னதாக அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ராவின் கேமரா அம்சங்கள்: ஒப்பிடுகையில் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 50எம்பி 1-இன்ச் டைப் சோனி எல்ஒய்டி-900 ப்ரைமரி சென்சார், இரட்டை 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் (3எக்ஸ் மற்றும் 6எக்ஸ்) மற்றும் 50எம்பி அல்ட்ராவைட் கேமரா உள்ளது
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? ஒப்போ நிறுவனம் அதன் பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த இந்த லீக் துல்லியமானதாக இருந்தால், பேட்டரி திறன் மற்றும் கேமரா அமைப்பு காரணமாக இந்த ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) போன்ற போட்டியாளர்களுடன் கடுமையாக போட்டியிடக்கூடும்!


Click it and Unblock the Notifications








