Home
Mobile

OPPO ஓஹோன்னா.. இதான் டா Phone-னு.. 7050mAh பேட்டரி, 200MP மெயின் கேமரா, 200MP பெரிஸ்கோப் கேமரா!

2026 மார்ச் மாதத்தில், ஒப்போ (Oppo) நிறுவனத்தின் அல்டிமேட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான பல அறிக்கைகள் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய முக்கிய அம்சங்களை பற்றிய பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன, ஆனால் சில தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

அவைகளில் ஒன்று - ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி. ஒருவழியாக அதுகுறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்டுள்ள விவரங்கள் வழியாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பேட்டரி அளவு லீக் செய்யப்பட்டுள்ளது.

OPPO.. 7050mAh பேட்டரி, 200MP மெயின் கேமரா, 200MP பெரிஸ்கோப் கேமரா!

ஒப்பி பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா டிஸ்பிளே மற்றும் பேட்டரி: முந்தைய ஜெனரேஷன் மாடலை போலவே, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 2K ரெசல்யூஷனை ஆதரிக்கும் 6.82-இன்ச் பிளாட் OLED பேனல் இடம்பெறும் என்று முந்தைய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த டிஸ்பிளேவின் ரெஃப்ரெஷ் ரேட் குறித்த விவரங்கள் எந்த லீக்களிலும் தோன்றவில்லை.

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல் அந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் EVT (என்ஜினீயரிங் வெலிடேஷன் டெஸ்ட்) யூனிட் ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. ஆக ரீடெயில் யூனிட் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் என்று அவர் நம்புகிறார்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா பற்றி தெளிவாக தெரியாத மற்றொரு விவரம் அதன் பேட்டரி அளவு. 7,000mAh பேட்டரி இல்லாமல் ஒரு ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று ஒப்போ முன்பு கூறியிருந்தது, இது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மாடலிலும் பெரிய அளவிலான பேட்டரி இடம்பெறும் என்பதை குறிக்கிறது. ஆனால் டிப்ஸ்டர் பிரார், இந்த மாடல் 7,050mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது - ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவின் பேட்டரி, 7,500mAh பெரிய பேட்டரியை கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலை விட சிறியதாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இருப்பினும் இது 6,100mAh பேட்டரியை கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா மாடலை விட பெரியது தான்.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒப்போ எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இது 200எம்பி (மெயின்) + 50எம்பி (அல்ட்ரா-வைட்) + 200எம்பி (3x பெரிஸ்கோப்) + 50எம்பி (பெரிஸ்கோப்) குவாட்-கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமராவையும் கொண்டிருக்கலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 சிப்பை கொண்டிருக்கும் என்றும், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 இல் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரங்கள் குறித்த தகவல்கள் இல்லை.

முன்னதாக அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- TUV ரெயின்லேண்ட் இன்டெலிஜெண்ட் ஐ கேர் 5.0 சர்டிபிகேட்

- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக் மோட்டார்
- 36,344.4 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)

- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 Ultra Tipped To Launch With 120Hz Display 7050mAh Battery in March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X