Home
Mobile

மோட்டோரோலா கதையை முடிக்க வரும் புது Oppo போன்.. 200எம்பி கேமரா.. 7050mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 20-ம் தேதி சீனா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். குறிப்பாக இந்த ஒப்போ போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): 6.82-இன்ச் 2.கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோரோலா கதையை முடிக்க வரும் புது Oppo போன்.. எந்த மாடல்?

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதேபோல் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போனின் பின்புறம் 200எம்பி Sony LYT-901 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி OmniVision டெலிபோட்டோ கேமரா + 50எம்பி Sony LYT600 டெலிபோட்டோ சொன்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 8கே வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வழங்கும் என்று கூறப்படுகிறது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும்.

7050mAh பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

237 கிராம் எடை கொண்டுள்ளது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதுவும் இந்த ஒப்போ மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா சிக்னேச்சர் போனுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போன் வெளிவர உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 Ultra specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X