மொத்தமாக மாறிய டிசைன்.. 200எம்பி கேமரா.. இதை வாங்க கூட்டம் அலை மோதப் போகுது.. எந்த மாடல்?
ஏப்ரல் 21-ம் தேதி ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் படங்கள் வெளியாகி உள்ளது. அதாவது மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போன்.
அதுவும் குவாட் கேமரா (Quad Camera) செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் உள்ளது. இந்த போனின் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக 6.82-இன்ச் 2.கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போனின் பின்புறம் 200எம்பி Sony LYT-901 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி OmniVision டெலிபோட்டோ கேமரா + 50எம்பி Sony LYT600 டெலிபோட்டோ சொன்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 8கே வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வழங்கும் என்று கூறப்படுகிறது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 7050mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் 237 கிராம் எடை கொண்டுள்ளது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
photos credits: weibo, gizmochina


Click it and Unblock the Notifications








