OPPO ஒரே போடு.. 200MP கேமரா.. 7050mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன மார்கெட்டும் மிரளும்படியான பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் (OPPO Find X9s) ஸ்மார்ட்போன்கள் வெளியாவிட்டன. இந்தியாவில் இருக்கும் ஓப்போ பிரியர்கள், இங்கு எப்போது வெளியாகும் என்று காத்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஓப்போ நிறுவனம் கிரீன் சிக்னல் காண்பித்துவிட்டது.
சீன மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஆகிய மாடல்கள் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகின. இதில் 2 மாடல்கள் வருகிற மே மாதம் இந்தியாவில் வெளியாகும் என்று ஓப்போ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ தவிர மற்ற மாடல்கள் வெளியாக உள்ளன.

மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஓரிரு வாரங்களில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, பீச்சர்கள் படிப்படியாக தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், சீன மார்கெட்டில் வெளியான வெர்ஷன்களின் பீச்சர்கள், விலை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இவை இந்திய வெர்ஷனில் இடம்பெறலாம்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா கொண்டுள்ளது. 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு குவாட்எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
மேலும், 200 எம்பி டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. 3.2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி, 3எக்ஸ் டெலிபோட்டோ ஜூம் மற்றும் 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. மெயின் மற்றும் அல்ட்ரா வைடு கேமராவில் சோனி சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் ஓம்னிவிஷன் சென்சார் உள்ளது.
பெரிஸ்கோப் கேமராவுக்கு சாம்சங் சென்சார் கிடைக்கிறது. மேலும், 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 7050mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,03,116ஆக இருக்கிறது. இந்தியாவிலும் அல்ட்ரா பிரீமியம் பட்ஜெட்டில் கிடைக்கும்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் அம்சங்கள் (OPPO Find X9s Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9500s 3nm) சிப்செட் கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே ஓஎஸ் கிடைக்கிறது. 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு உள்ளது.
50 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் ஹாசல்பிளாட் போர்ட்ராய்டு கொண்டுள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7025mAh பேட்டரி கிடைக்கிறது. சீன மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.86,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








