முதல் முறை.. சீனாவை தாண்டி வெளிய வந்த புது OPPO Ultra போன்.. 200MP SONY கேமரா, 7050mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு தயாராகி விட்டது. இந்நிறுவனம் அதன் பைண்ட் எக்ஸ்-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் 2026 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. அது என்னென்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை வழங்கலாம்? காத்திருந்து வாங்கலாமா? இதோ விவரங்கள்:
என்னென்ன மாடல்கள்? ஒப்போ நிறுவனத்தின் உலகளாவிய எக்ஸ் (Oppo Global X Handle) தளம் வழியாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது (ஒரு லேட்டஸ்ட் லீக் இது ஏப்ரல் 20 அறிமுகமாகும் என்கிறது).

ஆக இதுதான் - உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் ஒப்போவின் முதல் அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ (Oppo Find X9s Pro) என்கிற இன்னொரு புதிய மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது அல்ட்ரா மாடலை போல உலகளாவிய சந்தைக்கு வருமா என்பது குறித்த துல்லியமான விவரங்கள் இல்லை
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒப்போ நிறுவனமானது பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முதல் டீஸர் போட்டோவையும் வெளியிட்டுள்ளது. அந்த படத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில், பிரெஷர் சென்சிடிவ் ஆரஞ்சு கலர் பட்டன் ஒன்றை தெளிவாக பார்க்க முடிகிறது
ஒப்போ நிறுவனம் இந்த பட்டனை கேமரா கட்டுப்பாடுகளுக்கான குவிக் பட்டன் (Quick Button) என்று அழைக்கிறது. ஒப்போ நிறுவனம் இதற்கு முன்பும் இதே போன்ற ஹார்ட்வேரை பயன்படுத்தியுள்ளது. இது ஸ்னாப் கீ (Snap Key) என்றும் அழைக்கப்படுகிறது. இது கேமராவை விரைவாக அணுகுவதற்கான டச் சென்சிடிவ் கண்ட்ரோலர் ஆக செயல்படும்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ள ஆரஞ்சு பட்டனை - 2 முறை டாப் செய்வதன் மூலம் கேமராவை 'லான்ச்' செய்யலாம்; இது ஷட்டர் பட்டன் ஆகிவரும் செயல்படலாம்; இது ஸ்லைடு கெஸ்சர்கள் மூலம் ஜூம் செய்யவும் அனுமதிக்கலாம்; ஆடியோ ரெகார்ட் போன்ற 'கஸ்டம்' செயல்பாடுகளையும் ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ராவில் 200எம்பி ப்ரைமரி சென்சார் தலைமையிலான குவாட்-கேமரா செட்டப் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சோனி LYTIA 901 சென்சார் ஆக இருக்கலாம். பெரிஸ்கோப் ஜூமிற்காக இந்த ஸ்மார்ட்போனில் இன்னொரு 200எம்பி சென்சாரும் பேக் செய்யப்படலாம்.
இதோடு 50எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்ககளும் இடம்பெறலாம். கூடவே கலர் அக்யூரசியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு மல்டி-ஸ்பெக்ட்ரல் சென்சாரும் இதில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 6.82-இன்ச் 2K LTPO OLED டிஸ்பிளே, ஒரு பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் சிப்செட், 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயரில்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 7050mAh பேட்டரி ஆகியவைகளை எதிர்பார்க்கலாம்.
OPINION - ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை காத்திருந்து வாங்கலாமா? ஒப்போ அதன் அல்ட்ரா மாடலை சீனாவிற்கு வெளியே அனுப்புவதற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் - சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும்.
போதாக்குறைக்கு விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (சீனாவில்) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவும் இந்திய சந்தைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த 2 அல்ட்ரா மாடல்களுக்கு போட்டியாகவே ஒப்போ அதன் அல்ட்ரா மாடலை உலகளவில் அறிமுகம் செய்கிறது என்பது - வெளிப்படையான வியாபார உத்தி!
அட வியாபார உத்திலாம் நமக்கு எதற்கு ப்ரோ? இதை வெயிட் பண்ணி வாங்கலாமா? என்று கேட்டால்.. ஒப்போவின் முந்தைய அல்ட்ரா மாடல் ஆன ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ராவானது, அதன் கேமரா செயல்திறனுக்காக மிகவும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனாகும். ஆக வரவிருக்கும் மாடலிலும் "கேமரா டிப்பார்ட்மெண்ட்: வெயிட் ஆக ருக்கும். ஹை ரெசல்யூஷன் கொண்ட சென்சார்கள் மற்றும் அதிக ஜூமிங் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஆக உங்களுடைய தேவை - கேமரா செயல்திறன் தான் என்றால், ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்; முக்கியமாக இது ஷாவ்மீ 17 அல்ட்ராவிற்கு போட்டியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால்! ஒருவேளை இதன் விலை அதிகமாக இருந்தால்.. ஒப்பீடுகள் அவசியம்!


Click it and Unblock the Notifications








