Home
Mobile

விவோ கதையை முடிக்க வரும் புது Oppo போன்.. 200எம்பி கேமரா.. 7300mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

குவாட் ரியர் கேமராக்கள் இந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போனில் உள்ளது. மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ கதையை முடிக்க வரும் புது Oppo போன்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

6.82-இன்ச் 2.கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போனின் பின்புறம் 200எம்பி Sony LYT-901 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி OmniVision டெலிபோட்டோ கேமரா + 50எம்பி Sony LYT600 டெலிபோட்டோ சொன்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 8கே வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வழங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ போனில் உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும்.

விவோ கதையை முடிக்க வரும் புது Oppo போன்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

7300mAh பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனுக்கு IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக விவோ எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த புதிய ஒப்போ போன் வெளிவருகிறது. மேலும் அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

photo credits: smartprix

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Ultra Design and Specifications Leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X