Home
Mobile

ஆரம்பமே சும்மா அதிருதே.. OPPO Find X9 சீரிஸ் ப்ரீ-புக்கிங் தெறிக்கவிடும் போல.. ரூ.5,198 கிப்ட் பாக்ஸ் வருது!

ஒட்டுமொத்த ஓப்போ பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் (OPPO Find X9 Series) மாடல்களுக்கு கிடைக்க இருக்கும் ப்ரீ-புக்கிங் சலுகை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ரூ.5,198 மதிப்புள்ள பிரீமியம் கிப்ட் பாக்ஸ் மட்டுமல்லாமல், 24 மாதங்கள் நோ-காஸ்ட் ஈஎம்ஐ வரையில் ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்க இருக்கின்றன. இந்த சலுகைகள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகிய மாடல்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகிவிட்டது. இதனால் பீச்சர்கள் மற்றும் சலுகை விவரங்கள் வெளியாகி வருகின்றன.

ஆரம்பமே சும்மா அதிருதே.. OPPO Find X9 ப்ரீ-புக்கிங் தெறிக்கவிடும்!

இந்த மாடல்கள் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகவிட்டதால், பீச்சர்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், விலை மற்றும் சலுகை விவரங்கள் இந்திய மார்கெட்டில் கசிந்தால் மட்டுமே தெரியவரும். இப்போது, முழு ப்ரீ-புக்கிங் சலுகைகளும் கசிந்துவிட்டன. டிப்ஸ்டர் Sanju Choudhary மூலமாக இந்த சலுகை விவரங்கள் கசிந்துள்ளன.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் ப்ரீ-புக்கிங் சலுகைகள்: இந்த ஸ்மார்ட்போன்களை ப்ரீ-புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.5,198 மதிப்புள்ள பிரீமியம் கிப்ட் பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இதில் என்னென்ன இருக்கும் என்பது தெரியவில்லை. மேலும், 180 நாட்களுக்கான ரீபிளேஸ்மெண்ட் பாலிசி கொடுக்கப்பட இருக்கிறது. 10 சதவீத பேங்க் டிஸ்கவுன்ட் கிடைக்க இருக்கிறது.

24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்க இருக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்க இருக்கிறது. இறுதியாக கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) சலுகை மூன்று மாதங்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் மற்றும் ஈஎம்ஐ சலுகை கிடைக்க இருக்கிறது.

இந்த விவரங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. இந்த ப்ரீ-புக்கிங் சலுகைகளை ஓப்போ நிறுவனம் உறுதி செய்யவில்லை. இருப்பினும், இதே சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், முன்னதாக வெளியான மாடல்களுக்கும் இதேபோன்ற சலுகைகள் கிடைத்துள்ளன. இப்போது, இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களின் அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் அம்சங்கள் (OPPO Find X9 Series Specifications): ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் வர இருக்கிறது. ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ப்ரோ மாடலில் ஒரே வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, அதில் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் கலர்கள் வெளியாக இருக்கின்றன. 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே மற்றும் 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் வருகிறது.

மேலும், டைமன்சிட்டி 9500 சிப்செட் மற்றும் 7025mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 7500mAh பேட்டரி வருகிறது.ஃபைண்ட் எக்ஸ்9 விலை ரூ.74,999 பட்ஜெட்டிலும், ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ விலை ரூ.99,999 பட்ஜெட்டிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Series Pre-Booking Offers Tipped Ahead of India Launch What To Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X