அக்டோபர் போகட்டும் விடுங்க.. நவம்பரில் அறிமுகமாகும் OPPO-வின் 7500mAh பேட்டரி போன்.. இதை விட்றாதீங்க!
ஒப்போ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (OPPO Find X9 Series) ஸ்மார்ட்போன்கள் நேற்று (அக்.16) சீனாவில் அறிமுகமான வேகத்தில்.. ஒப்போ நிறுவனம் ஆனது பைண்ட் எக்ஸ்9 மற்றும் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய அறிமுக தேதியை இன்று (அக்.17) அறிவித்துள்ளது
ஒப்போவின் கூற்றுப்படி பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது அக்டோபர் 28 ஆம் தேதி அன்று உலகளாவிய வெளியீட்டை காணும். ஆனால் அதே நாளில் இந்தியாவில் அறிமுகம் ஆகாது. மாறாக ஒப்போவின் இந்த 2025 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2025 நவம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

சீனாவில் அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்: ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.54,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே தோராயமாக ரூ.58,000 மற்றும் ரூ.61,700 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் 16ஜிபி + 512ஜிபி மற்றும் 16ஜிபி + 1டிபி ரேம் ஆப்ஷன்களும் உள்ளன. அவைகள் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,400 மற்றும் ரூ.71,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன
இந்த சீரீஸின் ப்ரோ வேரியண்ட் ஆன ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதேபோல 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 512ஜிபி மற்றும் 16ஜிபி + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே (தோராயமாக) ரூ.70,300, ரூ.74,100) மற்றும் ரூ.82,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9,ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் மற்ற அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் 6.78-இன்ச் 1.5கே LTPO டிஸ்பிளே
- வெண்ணிலா மாடலில் 6.59-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- இரண்டும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கின்றன மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகின்றன
- ஃபுல்-ஸ்க்ரீன் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-On Display - AOD) அம்சத்தையும் கொண்டுள்ளன.
- இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட்டால் இயக்கப்படுகின்றன - - இரண்டுமே ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) உடன் வருகின்றன.
- இரண்டுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுடன் வருகின்றன.
- வெண்ணிலா மாடலில் 50-மெகாபிக்சல் சோனி LYT-828 ப்ரைமரி சென்சார் + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் + 50-மெகாபிக்சல் சாம்சங் ஜேஎன்5 அல்ட்ராவைடு கேமரா உள்ளன; முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது
- ப்ரோ மாடலில் 3எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்கள் உடன் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் உடன், வெண்ணிலா மாடலில் உள்ள அதே ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளன; முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ சென்சாரை கொண்டு உள்ளது.
- ப்ரோ மற்றும் வெண்ணிலா மாடல்கள் முறையே 7500mAh மற்றும் 7025mAh பேட்டரியை பேக் செய்கின்றன
- இரண்டும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன
- கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜே இ எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவைகளை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








