இந்த ஒத்த போன் வரட்டும் அப்புறம் இருக்கு.. 200MP கேமரா.. 7500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகிய மாடல்கள் வெளியாக இருப்பது உறுதியாகியதை தொடர்ந்து, இப்போது கலர் மற்றும் டிசைன் குறித்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 200 எம்பி கேமரா, 7500mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளேவுடன் ப்ரோ மாடல் ஒட்டுமொத்த ஓப்போ பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்துள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீனா மற்றும் குளோபல் மார்கெட்டில் இந்த ஃபைண்ட் எக்ஸ்9 மாடல்கள் வெளியாகிவிட்டன. குளோபல் மார்கெட்டில் வெளியானதை அடுத்து இந்தியாவில் வெளியாக இருப்பதை ஓப்போ நிறுவனம் உறுதி செய்தது. இதுபோக ஓப்போ பட்ஸ்3 ப்ரோபிளஸ் (OPPO Buds3 Pro+) மாடலும் களமிறக்கப்படும் என்று தெரிவித்தது. அதேபோல முக்கிய பீச்சர்கள் உறுதியாகின.

ஆகவே, 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, ப்ரோ நைட் போட்டோகிராபி மற்றும் 4K ரெசொலூஷன் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்கள் கிடைக்க இருப்பது உறுதியாகியது. இப்போது, கலர் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மாடலில் 2 கலர்களும், ப்ரோ மாடலில் 2 கலர்களும் கிடைக்க இருக்கின்றன.
டைட்டானியம் கிரே (Titanium Grey), ஸ்பேஸ் பிளாக் (Space Black) கலர்கள் ஃபைண்ட் எக்ஸ்9 மாடலிலும், சில்க் ஒயிட் (Silk White) மற்றும் டைட்டானியம் சார்கோல் (Titanium Charcoal) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. டிசைனை பார்க்கையில் வெல்வெட் மேட் பினிஷிங் பேனல் கொண்ட மெட்டாலிக் மிடில் ஃபிரேம் வர இருக்கிறது. 1.15 எம்எம் அல்ட்ரா தின் பெசல் கிடைக்க இருக்கிறது.
மிட்-பிரீமியம் ஓப்போ மாடல்களில் கிடைக்கும் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, மைக்ரோசைட் மற்றும் அதில் பீச்சர்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகிறனது. இப்போது குளோபல் வேரியண்ட்டின் பீச்சர்களை பார்க்கலாம்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அம்சங்கள் (OPPO Find X9 Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் உள்ளது. 7025mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ அம்சங்கள் (OPPO Find X9 Pro Specifications): 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், கலர்ஓஎஸ் 16 கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. 7500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த மாடல்களில் IP66 + IP68 + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. குளோபல் மார்கெட் விலை ரூ.1 லட்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் மாறுபடும்.


Click it and Unblock the Notifications








