புரட்டிப் போட போகுது.. 200MP டெலிபோட்டோ கேமரா.. 7500mAh பேட்டரி.. LUMO பிக்சல்.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகியவற்றின் வெளியீட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. 200 எம்பி கேமரா, 7500mAh பேட்டரி, லூமோ பிக்சல் என்ஜின், ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் அக்டோபர் 16ஆம் தேதி இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இந்த தேதியை உறுதி செய்த ஓப்போ நிறுவனம், இதில் பிளாக்சிப் சிப்செட்டான டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) கிடைக்க இருப்பதையும் உறுதி செய்துள்ளது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்க இருக்கிறது.

இந்த ஓஎஸ் லேட்டஸ்ட் வெர்ஷனாகும். அதேபோல ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. இந்த மாடல்களில் புதிய டியான்மா ஸ்கிரீன் (Tianma Screen) கிடைக்கிறது. இதில் சூப்பர் ஐ புரொடெக்சன் (Super Eye Protection) கிடைக்க இருக்கிறது. அதேபோல என்ஹாண்ஸ் செய்யப்பட்ட ஃபிளிக்கர் ப்ரீ டிம்மிங் டெக்னாலஜி கிடைக்கிறது.
மேலும், ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் கிடைக்க இருக்கிறது. மேலும், 3600 நிட்ஸ் லார்ஜ் விண்டோ பீக் பிரைட்னஸ் கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்காக மட்டுமே பிரத்யேகமாக பி3 டிஸ்பிளே சிப் (P3 Display Chip) கிடைக்க இருக்கிறது. அதேபோல மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்சட் மட்டுமல்லாமல், டிடல் என்ஜின் (Tidal Engine) அப்கிரேட் கிடைக்க இருக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் 7025mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலில் 7500mAh பேட்டரி கிடைக்கிறது. அதேபோல ப்ரோ மாடலில் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் லூமோ சூப்பர்-பிக்சல் என்ஜின் (LUMO Super Pixel Engine) கிடைக்க இருக்கிறது.
இதுபோக வழக்கமாக ஓப்போ மாடல்களில் கிடைக்கும் ஹாசல்பிலாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) வர இருக்கிறது. 8K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷனில் போட்டோக்களை எடுக்கலாம். இந்த பீச்சர்களை மட்டுமே ஓப்போ நிறுவனம் உறுதி செய்து இருக்கிறது. டெலிபோட்டோ கேமராவில் ஆப்டிகல் ஜூமிங் எதிர்பார்க்கலாம்.
அதேபோல பிரீமியம் லுக்கில் புதிய கேமரா டிசைன் கொடுக்க இருக்கிறது. இந்த வெளியீட்டு தேதி மற்றும் கேமரா மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்களை மட்டுமே இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும். முன்னதாக வெளியான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் மாடல்களை பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மற்றும் எக்ஸ்8 ப்ரோ மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களை சீனாவுக்கு பிறகு இங்கு எதிர்பார்க்கலாம். இந்த மாடல்களில் டைமன்சிட்டி 9400 (Dimensity 9400) சிப்செட் கிடைக்கிறது. ப்ரோவில் 5910mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் வருகிறது.
அதேபோல எக்ஸ்8 மாடலில் 5630mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி டெலிபோட்டோ கேமரா 2 மாடல்களிலும் கிடைக்கிறது. சோனி சென்சார் வருகிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 போனின் ஆரம்ப விலை ரூ.69,999 பட்ஜெட்டிலும், ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.99,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








