மார்க்கெட்டுக்கு ஆட்டம் காட்டும் விலை.. புது OPPO போன்.. 7500mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம்.. எந்த மாடல்?
ஒப்போவின் புதிய ஸ்மார்ட்போன்களாக பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் (Oppo Find X9 Series) மாடல்கள் நாளை (நவம்பர் 18 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும்.
அறிமுகமான பின்னர் பிளிப்கார்ட் (Flipkart) வழியாகவும், ஒப்போ வலைத்தளம் வழியாகவும் விற்பனைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. இப்போது "மீண்டும்" இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலைகள் லீக் ஆகியுள்ளது. கவனிக்கத்தக்க வகையில் முந்தைய அறிக்கைகள் சுட்டிக்காட்டியதை விட புதிதாக கிடைத்துள்ள அறிக்கை சற்று அதிக விலையை பரிந்துரைக்கிறது.

புதிதாக கிடைத்துள்ள அறிக்கையின்படி:
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.1,09,999
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.79,999
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.89,999
முன்னதாக வெளியான அறிக்கையின்படி:
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.99,999
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.74,999
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.84,999
முன்னரே குறிப்பிட்டபடி, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில், நாளை (நவ.18) மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும் பின்னர் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா (Oppo India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும். எக்ஸ்9 மாடல் ஆனது ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே கலர்களிலும், எக்ஸ்9 ப்ரோ மாடல் சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் கலர்களிலும் விற்பனைக்கு வருமென்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- TUV ரெயின்லேண்ட் இன்டெலிஜெண்ட் ஐ கேர் 5.0 சர்டிபிகேட்
- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக் மோட்டார்
- 36,344.4 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 32,052.5 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆனால் சிறிய 7,025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி


Click it and Unblock the Notifications








