OPPO ஒரே போடு.. முரட்டு தூக்கலா 200MP கேமரா.. 7500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் கசிந்துள்ளன. 200 எம்பி கேமரா, 7500mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களின் பட்டையை கிளப்புகின்றன. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் வெளியீட்டுக்கு பிறகு ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கின்றன. நவம்பர் 18ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. முக்கிய பீச்சர்கள் உறுதியாகிவிட்டன. ஆனால், விலை விவரங்கள் மட்டும் வெளியாகாமல் இருந்தது.

இப்போது, டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) மூலமாக எக்ஸ் தளத்தில் கசிந்துள்ளன. ஆகவே, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.99,999 பட்ஜெட்டில் இருக்கிறது.
மேலும், ஃபைண்ட் எக்ஸ்9 மாடலில் டைட்டானியம் சார்கோல் (Titanium Charcoal) மற்றும் சில்க் ஒயிட் (Silk White) கலர்களும் ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலில் ஸ்பேஸ் பிளாக் (Space Black) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) கலர்கள் இருக்கின்றன. இப்போது, கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற பீச்சர்களை பார்க்கலாம். இது அதிகாரப்பூர்வமாக உறுதியான பீச்சர்களாகும்.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அம்சங்கள் (OPPO Find X9 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது. 6.59 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
மேலும், 2 எம்பி மோனோகுரோம் கேமரா உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜிபியு (Arm Mali GPU) கிடைக்கிறது. 7025mAh பேட்டரி கிடைக்கிறது, கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ அம்சங்கள் (OPPO Find X9 Pro Specifications): இந்த ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கிறது. ஆட்டோ போகஸ் மற்றும் ஓஐஎஸ் கொண்ட 50 எம்பி வைடு கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. 200 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது.
இதிலும், ஆட்டோ போகஸ், ஓஐஎஸ் கிடைக்கிறது. ஆப்டிகல் ஜூமிங் உள்ளது. 2 எம்பி மோனோகுரோம் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதிலும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜிபியு கிடைக்கிறது. 7500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கலர்ஓஎஸ் 16 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications








