Home
Mobile

SALE பிச்சிக்கிட்டு போகுது.. ரூ.11000 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. 7500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.11,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக கிடைப்பதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இந்த மாடல்களின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் விலை

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.74,999ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.84,999ஆகவும் இருக்கிறது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,999ஆக இருக்கிறது.

SALE பிச்சிக்கிட்டு போகுது.. ரூ.11000 டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா!

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலுக்கு மட்டும் ஓப்போ ஹசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட் (OPPO Hasselblad Teleconverter Kit) கிடைக்கிறது. இந்த கிட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஃபைண்ட் எக்ஸ்9 மாடலுக்கு ரூ.7,500 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

அதேபோல ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலுக்கு ரூ.11,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ஃபைண்ட் எக்ஸ்9 மாடலை ரூ.67,499 பட்ஜெட்டிலும், ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடலை ரூ.98,999 பட்ஜெட்டிலும் வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎப்சி பேங்க் ஆகியவற்றின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் அம்சங்கள்

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 2 எம்பி மல்டி-ஸ்பெக்ட்ரல் லென்ஸ் கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி808 சென்சார், அல்ட்ரா வைடில் சாம்சங் ஜேஎன்5 சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் சோனி எல்ஒய்டி600 சென்சார் கிடைக்கின்றன. 32 எம்பி செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ் 615 சென்சார் உள்ளது. 7025mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. ஸ்பேஸ் பிளாக், டைட்டானியம் கிரே கலர்கள் உள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (2780 x 1264 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 16, கலர்ஓஎஸ் 16 உள்ளது.

50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 200 எம்பி டெலிபோட்டோ + 2 எம்பி மல்டி-ஸ்பெக்ட்ரல் லென்ஸ் உள்ளது. 120X ஜூமிங், ஹசல்பிளாட் போர்ட்ராய்டு உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 7500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Find X9 Pro Available For Purchase in India Check Specifications Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X