Home
Mobile

எக்கசமான ஆபர், டிஸ்கவுண்ட், இலவசம்.. OPPO இறக்கிய 2 முரட்டு போன்களின் விற்பனை ஆரம்பம்!

ஒப்போ (Oppo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) மாடல்கள் ஆனது எக்கச்சக்கமான ஆபர்களுடன் இன்று (நவம்பர் 21 ஆம் தேதி) முதல் விற்பனைக்கு வந்தன.

என்ன விலை? ஸ்பேஸ் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே கலர்களில் கிடைக்கும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது, அதே நேரத்தில் 16GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் மெயின் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது.

OPPO இறக்கிய 2 முரட்டு போன்களின் விற்பனை ஆரம்பம்!

மறுகையில் சில்க் ஒயிட் மற்றும் டைட்டானியம் சார்கோல் கலர்களில் கிடைக்கும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16GB ரேம் + 512GB ஆப்ஷன் ரூ.1.09,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ஒப்போ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.

என்னென்ன ஆபர்? எஸ்பிஐ, எச்டிஎப்சி வங்கி, கோடக் வங்கி அல்லது ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஒப்போவின் ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கினால் 10 சதவீதம் வரை உடனடி கேஷ்பேக்கை பெறலாம்.

நோ -காஸ்ட் இஎம்ஐ திட்டங்கள் (No Cost EMI Plans) 24 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. மேலும் பஜாஜ் பின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், எச்டிபி நிபைனான்சியல் சர்வீசஸ், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி மற்றும் பூனவல்லா ஃபின்கார்ப் வாடிக்கையாளர்கள் ஜீரோ-டவுன்-பேமெண்ட் திட்டங்களை (Zero Down Payment Plans) பெறலாம்.

கேஷிஃபை (Cashify) மற்றும் சர்விஃபை (Servify) மூலம் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் (Exchange Bonus) பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள் 3 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோவிற்கான (Google Gemini Pro) இலவச அணுகலையும் பெறுவார்கள்.

மேலும் நவம்பர் 18 முதல் நவம்பர் 30 வரை ரூ.2,000 மதிப்புள்ள பேடிஎம் டிராவல் பிளைட் வவுச்சரை வாங்கலாம் என்றும் ஒப்போ நிறுவனம் மேலும் கூறியது. ஜியோ பயனர்கள் ரூ.2,250 மதிப்புள்ள சலுகைகளை ரூ.2,000 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டங்களில் பெறுவார்கள் (ரூ.649 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில்). கடைசியாக பதினெட்டு முதல் இருபத்தைந்து வயதுடைய ஜியோ வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் பதினெட்டு மாத ஜெமினி ப்ரோவையும் பெறுவார்கள்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- TUV ரெயின்லேண்ட் இன்டெலிஜெண்ட் ஐ கேர் 5.0 சர்டிபிகேட்

- 3nm மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக் மோட்டார்
- 36,344.4 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- Hasselblad ஆல் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 1/1.28-இன்ச் சென்சார், 23மிமீ குவிய நீளம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.5) சோனி LYT-828 ப்ரைமரி கேமரா
- 15மிமீ குவிய நீளம் உடனான 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் ISOCELL 5KJN5 அல்ட்ராவைடு கேமரா
- 200-மெகாபிக்சல் (எப்/2.1) டெலிஃபோட்டோ கேமரா (70மிமீ குவிய நீளம் மற்றும் ஓஐஎஸ்)

- 50-மெகாபிக்சல் (எப்/2.0) சாம்சங் 5KJN5 செல்பீ கேமரா
- 7500mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி
- 80W SuperVOOC வயர்டு மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- SGS டிராப் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேட்

ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சிப்செட், ஓஎஸ், ஐபி ரேட்டிங், டிராப் ப்ரொடெக்ஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான சிறிய 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 32,052.5 சதுர மிமீ அட்வான்ஸ்டு வெப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப் /1.6) சோனி LYT-808 வைட் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- OIS உடன் 50-மெகாபிக்சல் (எப்/2.6) சோனி LYT-600 டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா
- ப்ரோ மாடலைப் போலவே வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், ஆனால் சிறிய 7,025mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X9 and Oppo Find X9 Pro India Sale Started With Lot of Offers Discounts and Free Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X