Home
Mobile

இவரு வேற மாதிரிங்க.. மிட்-ரேஞ்ச்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5700mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,700mAh பேட்டரி, 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் (OPPO Find X8s) வெளியாக இருக்கிறது. இந்த ஃபைண்ட் சீரிஸ் போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி? எப்போது வெளியாகிறது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனானது, ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் களமிறங்கிய பிறகு மற்ற மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆகவே, ஏப்ரல் மாத இறுதியில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த போனின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. அந்த பீச்சர்களை பார்த்துவிட்டு விலையை தெரிந்து கொள்வோம்.

இவரு வேற மாதிரிங்க.. மிட்-ரேஞ்ச்ல AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் அம்சங்கள் (OPPO Find X8s Specifications): இந்த ஓப்போவில் செர்ரி பிளாசம் பிங்க் (Cherry Blossom Pink), மூன்லைட் ஒயிட் (Moonlight White) மற்றும் ஐலேண்ட் ப்ளூ (Island Blue) கலர்கள் கிடைக்கின்றன. மேலும், ஸ்ட்ர்ரி பிளாக் (Starry Black) கலரும் கிடைக்க இருக்கிறது. இதுவொரு ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கொண்ட மாடலாகும்.

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சிப்செட் கொண்ட முதல் மாடலாக இந்த ஓப்போ இருக்கிறது.

6.3 இன்ச் (2760 × 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவுக்கு ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) இந்த ஓப்போ போனில் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் டெலிபோட்டோ உள்ளது.

இந்த 50 எம்பி டெலிபோட்டோ கேமராவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த ஓப்போ போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 5,700mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. IP68-IP69 ரேட்டிங் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X8s With 50MP Camera 5700mAh Battery To Launch April 10 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X