Home
Mobile

மிரளுது மிட்-ரேஞ்ச்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5700mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் பிரியர்கள் மிரளும்படி 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 5700mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் (OPPO Find X8s) போன் சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஏஐ பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் அம்சங்கள் (OPPO Find X8s Specifications): இந்த ஓப்போ போனில் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.

மிரளுது மிட்-ரேஞ்ச்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5700mAh பேட்டரி மாடல்!

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 3என்எம் ஆக்டா கோட் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் (Octa Core MediaTek Dimensity 9400+) சிப்செட் கிடைக்கிறது. 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஸ்க்ராட்ஜ் ரெசிஸ்டன்ட் (Scratch Resistant), ட்ராப் ரெசிஸ்டன்ட் (Drop Resistant) கிடைக்கிறது. இதுபோக IP69 ரேட்டிங் & IP68 ரேட்டிங் டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ போன் இருக்கிறது.

மிரளுது மிட்-ரேஞ்ச்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5700mAh பேட்டரி மாடல்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் டிசைன் (OPPO Find X8s Design): அல்ட்ரா-லைட் அலுமினியம் அலாய் மிடில் ஃபிரேம் (Ultra-light Aluminum Alloy Middle Frame) கிடைக்கிறது. இதில் வழக்கமான வால்யூம் மற்றும் பவர் பட்டன் இருக்கிறது. ஆனால், பவர் பட்டனில் ஏஐ ஒன்-கிளிஸ் ஃபிளாஷ் (AI One-Click Flash), கேமரா (Camera), ரெக்கார்டிங் (Recording) போன்ற பல்வேறு ஃபங்ஷன்கள் ஆட் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்களும் கிடைக்க இருக்கின்றன.

மிரளுது மிட்-ரேஞ்ச்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5700mAh பேட்டரி மாடல்!

மூன்லைட் ஒயிட் (Moonlight White), செர்ரி பிளாசம் பிங்க் (Cherry Blossom Pink), ஐலேண்ட் ப்ளூ (Island Blue) மற்றும் ஹோசினோ பிளாக் (Hoshino Black) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இதில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மூன்லைட் ஒயிட் மற்றும் ஹோசினோ பிளாக் ஆகிய 2 கலர்கள் மட்டுமே கிடைக்க இருக்கின்றன.

ஓப்போ ஆபீஸ் அசிஸ்டன்ட் (OPPO Office Assistant): மல்டி மீடியாவிலும் ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் மொபைல் + பிசி (PC) கனெக்டிவிட்டிக்கு ஓபிளஸ் இன்டர்கனெக்ட் (O+ Interconnect), ஏஐ இன்டன்ட் சர்ச்ச் (AI Intent Search) மற்றும் ஏஐ டாகுமென்டேஷன் (AI Documentation) சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது இந்த போனின் கேமரா விவரங்களை பார்போம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் கேமரா (OPPO Find X8s Camera): ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் டுவ்-ஆக்சிஸ் ஓஐஎஸ் (Two-axis OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவிலும் டுவ்-ஆக்சிஸ் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. ஹசல்பிளாட் மாஸ்டர் போர்ட்ராய்டு உள்ளது.

மிரளுது மிட்-ரேஞ்ச்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5700mAh பேட்டரி மாடல்!

மேலும், ஏஐ இமேஜ் குவாலிட்டி என்ஹான்ஸ்மெண்ட் (AI Image Quality Enhancement) கொண்ட லைட்-போட்டோஸ் (Live Photos) கிடைக்கிறது. 4K (டால்பி விஷன்) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. இந்த கேமராவில் ஏஐ பீச்சர்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் (AI Image Assistant) சப்போர்ட் மூலம் பல்வேறு பீச்சர்கள் கிடைக்கின்றன.

இதில் ஏஐ அல்ட்ரா எச்டி பிக்சல்கள் (AI Ultra HD Pixels), ஏஐ எலிமினேஷன் (AI Elimination), ஏஐ டீ-கிளேர் (AI De-glare) மற்றும் ஏஐ ஆன்டி,ஸ்மியர் (AI Anti-smear) வருகின்றன. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் 5700mAh பேட்டரி, 80W வயர்டு ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் விலை (OPPO Find X8s Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,364 ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.51,716 ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.55,243 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.58,770 ஆகவும் இருக்கிறது.

இறுதியாக 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.64,664 ஆக இருக்கிறது. இந்த விலை பட்டியலோடு சீன மார்கெட்டில் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போன் வெளியாகி இருக்கிறது. ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆனால், விற்பனையானது ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த விற்பனைக்கு பிறகு குளோபல் மார்கெட் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்பட மற்ற மார்கெட்டுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த போன் வெளியாவது உறுதியாகும்.

Best Mobiles in India

English summary
OPPO Find X8s With 16GB RAM 5700mAh Battery Launched China Sale From April 16 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X