பின்றானே இவன்.. மிட்-ரேஞ்சல 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் பிளஸ் (OPPO Find X8s+) போன் வெளியாகி இருக்கிறது. ஹசல்பிளாட் போர்ட்ராய்டு, லூமோ லைட் கன்டென்சேஷன் இமேஜிங் சிஸ்டம், டைமன்சிட்டி 6400+ சிப்செட் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8பிளஸ் போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
சீனா மார்கெட்டில் இந்த ஃபைண்ட் எக்ஸ்8எஸ் பிளஸ் போன் வெளியாகி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஹோசினோ பிளாக் (Hoshino Black), மூன்லைட் ஒயிட் (Moonlight White) மற்றும் ஹயசின்த் பர்பிள் (Hyacinth Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. IP69 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. டபுள்-சைடெட் கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (Double-sided Crystal Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் பிளஸ் அம்சங்கள் (OPPO Find X8s Plus Specifications): இந்த ஓப்போ போனில் 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ (ஆட்டோ போகஸ்) மற்றும் 32 எம்பி செல்பீ கேமரா கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஹசல்பிளாட் போர்ட்ராய்டு (Hasselblad Portraitoid), லூமோ லைட் கன்டென்சேஷன் இமேஜிங் சிஸ்டம் (LUMO Light Condensation Imaging System), மேக்ரோ ஷூட்டர் மோட் (Macro Shooting Mode), அல்ட்ரா கிளியர் லைவ் போட்டோஸ் (Ultra-clear Live Photos) மற்றும் ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் (AI Image Assistant) சப்போர்ட் கிடைக்கிறது.
கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ 3என்எம் (Octa Core Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.59 (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த ஓப்போ ஃபைண்ட்8எக்ஸ் பிளஸ் போனில் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் (Super Flash Charge), 50W வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் (Wireless Flash Charge) மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜ் (Wireless Reverse Charge) சப்போர்ட் கிடைக்கிறது. 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.49,488ஆக இருக்கிறது.
12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.55,325ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.58,857ஆகவும், 16 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.64,759ஆகவும் இருக்கிறது. முன்பே சொன்னதை போல சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications