Home
Mobile

மிட்-ரேஞ்ச் அதிருது.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் (OPPO Find X8 Series) மாடல்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. சீனாவில் களமிறங்க இருக்கும் இந்த சீரிஸில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra), ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் (OPPO Find X8s) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் பிளஸ் (OPPO Find X8s+) மாடல்கள் வர இருக்கின்றன. இதில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் பிளஸ் போனின் டிசைன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓப்போவில் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் மற்றும் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் கொண்ட ஹைசின்த் பர்பிள் (Hyacinth Purple), மூன்லைட் ஒயிட் (Moonlight White), ஸ்டார்ரி பிளாக் (Starry Black) ஆகிய கலர் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. பிரீமியம் + சிம்பிள் டிசைனில் ரவுண்ட் கேமரா பம்ப் கிடைக்க இருக்கிறது. இந்த டிசைன் பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன்.

மிட்-ரேஞ்ச் அதிருது.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 பிளஸ் அம்சங்கள் (OPPO Find X8s Plus Specifications): இப்போது பார்க்கப்போகும் பீச்சர்கள் மர்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அதிகாரப்பூர்வமானவை கிடையாது. 6.59 இன்ச் (2760 × 1256 பிக்சல்கள்) குவாட் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. பிரீமியம் டிஸ்பிளேவாக இருப்பதால், ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) புரொடெக்சன் வருகிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 பிளஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.

மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வர இருக்கிறது. இந்த ரேம் பர்ஃபாமென்ஸ்க்கு ஏற்றபடி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. அப்கம்மிங் ஓப்போ போன்களில் கிடைக்கும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 பிளஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700 (SONY LYT 700) சென்சார் + ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கிடைக்க இருக்கும்.

மேலும், டெலிபோட்டோவில் சோனி எல்ஒய்டி 600 (SONY LYT 600) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 பிளஸ் போனில் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மட்டுமல்லாமல், 50W மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல் IP69 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, அண்டர் வாட்டர் போட்டோகிராபி எதிர்பார்க்கலாம். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பது உறுதியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X8s Plus With 50MP Camera 12GB RAM To Launch China April 10 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X