விட்ராதீங்க சார்.. ரூ.5000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5630mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5910mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 (OPPO Find X8) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பிரீமியம் போனின் முழு விவரங்கள் இதோ.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 பிளிப்கார்ட் விற்பனை (OPPO Find X8 Flipkart Sale): இந்த ஓப்போவின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் இப்போது ரூ.5,000 டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு கஸ்டமர்களுக்கும் ரூ.5,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதுவே, ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.6,999 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மல்டிபிள் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அம்சங்கள் (OPPO Find X8 Specifications): இந்த ஓப்போ போனில் 6.59 (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இந்த ஃபைண்ட் எக்ஸ்8 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 (Octa Core 3nm MediaTek Dimensity 9400) சிப்செட் மற்றும் கலர்ஓஎஸ்15 (ColorOS 15) கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ டெலிஸ்கோப் ஜூமிங், ஏஐ போட்டோ ரீமாஸ்டர் போன்ற ஏஐ பீச்சர்களுடன் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) மற்றும் பிரீமியம் கேமரா சென்சார்கள் கிடைக்கின்றன.
சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் சாம்சங் (Samsung) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் (Sony LYT 600) 50 எம்பி டெலிபோட்டோ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரீமியம் கேமராவில் 3எக்ஸ் பெரிஸ்கோப் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவும் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சாருடன் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 போனில் 5630mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 + IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications