மிரட்டிவிட்டாப்ல.. SONY கேமரா.. 120X ஜூமிங்.. 5630mAh பேட்டரி.. XDR டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
ஆப்பிள் போன்களுக்கு நிகரான பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், டிஸ்பிளே மற்றும் கேமரா பீச்சர்களிலும் தட்டித்தூக்கும்படி ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 (OPPO Find X8) போன் களமிறங்கி இருக்கிறது. ப்ரோ எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, சோனி சென்சாருடன் மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமரா, 120X டிஜிட்டல் ஜூமிங், டால்பி விஷன் 4K வீடியோ ரெக்கார்டிங், 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 5630mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அம்சங்கள் (OPPO Find X8 Specifications): இந்த ஓப்போவில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 3என்எம் எஸ்ஓசி (Octa Core Dimensity 9400 3nm SoC) சிப்செட் மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) வருகிறது. ஓப்போவின் பிரீமியம் கலர்ஓஎஸ்15 (ColorOS 15) கிடைக்கிறது.

இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் வருகிறது. ஓப்போ கிரிஸ்டல் சீல்டு (OPPO Crystal Shield) புரொடெக்சன் கொண்ட 6.59 இன்ச் (2760 × 1256 பிக்சல்கள்) ப்ரோ எஸ்டிஆர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 போனில் ஐந்து வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்களும் வருகின்றன. பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
சாம்சங் எஸ்5கேஜேன்5 (Samsung S5KJN5) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் 3X பெரிஸ்கோப் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் வருகிறது. மெயின் கேமராவை போல ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வருகிறது.
இந்த கேமராவில் டால்பி விஷன், எச்டிஆர் கொண்ட 4K வீடியோ ரெக்ராடிங் கிடைக்கிறது. மேலும், ஏஐ இமேஜ் அசிஸ்டன்ட் (AI Image Assistant) வருகிறது. ஆகவே, ஏஐ டீ-கிளார் (AI De-glare), ஏஐ ஆன்டி-ஸ்மீயர் (AI Anti-smear), ஏஐ அல்ட்ரா எச்டி பிக்சல் (AI Ultra HD Pixels) மற்றும் ஏஐ எலிமினேஷன் (AI Elimination) போன்ற ஏஐ கேமரா பீச்சர்களை பயன்படுத்த முடியும்.
சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP68 + IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5630mAh பேட்டரி வருகிறது. ஸ்டார்பீல்டு பிளாக் (Starfield Black) மற்றும் ப்ளோட்டிங் லைட் ஒயிட் (Floating Light White) கலர்கள் இருக்கிறது.
மேலும், சேசிங் விண்ட் ப்ளூ (Chasing Wind Blue), பபிள் பிங்க் (Bubble Pink) கலர்களும் இருக்கிறது. இந்த ஓப்போவின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,615 பட்ஜெட்டில் இருக்கிறது. சீனாவில் வெளியாகிவிட்டது, அக்டோபர் 31ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. குளோபல் மார்கெட் மற்றும் இந்திய வெளியீடு அடுத்த சில வாரங்களில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








