யாரு சாமி அவன்.. 100W சார்ஜிங்.. 6100mAh பேட்டரி.. 12GB ரேம்.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra) போனின் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் வெளியாகிவிட்டன. அதேபோல வெளியீட்டு தேதியும் உறுதியாகி இருக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா போனின் முழு பீச்சர்கள், வெளியீட்டு விவரங்கள் இதோ.
ஏப்ரல் 10ஆம் தேதி அன்று சீன மார்கெட்டில் இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா களமிறங்க இருக்கிறது. இந்த பிரீமியம் போனுடன் ஓப்போ பைண்ட் எக்ஸ்8எஸ் (OPPO Find X8s) மற்றும் ஓப்போ ஃபைண்ட்எக்ஸ்8எஸ் பிளஸ் (OPPO Find X8s+) ஆகிய மாடல்களும் வெளியாக இருக்கின்றன. இதில் ஒட்டுமொத்த கவனத்தையும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா பெற்றுள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X8 Ultra Specifications): இந்த ஓப்போவில் மூன்லைட் ஒயிட் (Moonlight White), மார்னிங் லைட் (Morning Light), ஹோசினோ பிளாக் (Hoshino Black) ஆகிய கலர்கள் வெளியாக இருக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.
இதில் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டில் சாட்டிலைட் கனெக்டிவிட்டி கிடைக்க இருக்கிறது. பெரிஸ்கோப் டெலிபோட்டோ கொண்ட ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (HASSELBLAD Camera System) வருகிறது. இந்த பீச்சர்களை மட்டுமே ஓப்போ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இப்போது மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா போனில் ஆண்டாராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்க இருக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது.

குவாட் கர்வ்ட் டிசைனில் 6.82 இன்ச் (3168 × 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் குவாட்எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. பிரீமியம் டிஸ்பிளேவாக இருப்பதால், ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு (OPPO Crystal Shield) புரொடெக்சன் உள்ளது.
குவாட் ரியர் செட்டப் + ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 900 சென்சார்) + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா (சோனி எல்ஒய்டி 700 சென்சார்) கிடைக்கிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) கிடைக்கிறது.
இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. IP68 + IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6100mAh பேட்டரி மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கிடைக்கிறது. மிட்-பிரீமியம் பட்ஜெட்டில் வெளியாகிறது.
Image Credits: @stufflistings (X)


Click it and Unblock the Notifications








