Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க! 6100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஓப்போ பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படி 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 6100mAh பேட்டரி மட்டுமல்லாமல், குவாட்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் சிப்செட், சோனி எல்ஒய்டி மெயின் கேமரா, 120X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra) களமிறங்கி இருக்கிறது. முழு விவரங்கள் இப்போது பார்க்கலாம்.

கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கிடைக்கிறது. மெயின் கேமரா, அல்ட்ரா வைடு கேமரா, டெலிபோட்டோ கேமரா மட்டுமல்லாமல், செல்பீ கேமராவிலும் பிரீமியம் சென்சார்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஏஐ பீச்சர்களும் கேமராவில் கிடைக்கின்றன. மற்ற பீச்சர்களும் இப்படியே பிரீமியமாக வருகின்றன.

வெச்சி செஞ்சிட்டாங்க! 6100mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. SONY கேமரா!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X8 Ultra Specifications): இந்த ஓப்போ போனில் சோனி எல்ஒய்டி 900 (Sony LYT 900) சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு சப்போர்ட் உள்ளது.

சோனி எல்ஒய்டி700 (Sony LYT 700) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட அல்ட்ரா-டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த குவாட் கேமராவில் 2 எம்பி கலர் சென்சாரும் கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ், ஆன்டி-ஷேக், 4K வீடியோ ரெக்கார்டிங், 120X டிஜிட்டல் ஜூமிங், 6X ஆப்டிகல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா போனின் 32 எம்பி செல்பீ கேமாராவில் சோனி ஐஎம்எக்ஸ்809 (Sony IMX809) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ட்ரூ டோன் ப்ரோஎக்ஸ்டிஆர் (True Tone ProXDR) டிஸ்பிளே டெக்னாலஜி கிடைக்கிறது.

ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு (OPPO Crystal Shield) பாதுகாப்பு மற்றும் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொண்ட 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 510 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. இதுவொரு எக்ஸ்ட்ரீம் எடிஷன் (Extreme Edition) வெர்ஷனாகும். ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கிடைப்பது உறுதியாகும்.

6100mAh பேட்டரி மட்டுமல்லாமல், அந்த பேட்டரிக்கு 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போவின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.76,143ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.82,020ஆகவும் இருக்கிறது.

மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட சாட்டிலைட் கம்யூனிகேஷன் மாடலின் விலை ரூ.93,682ஆக இருக்கிறது. இப்போது சீனாவில் வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதி அங்கு விற்பனை தொடங்குகிறது. அதன்பிறகு இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஸ்டார்ரி பிளாக், மூன்லைட் ஒயிட் மற்றும் மார்னிங் லைட் ஆகிய கலர்கள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
OPPO Find X8 Ultra With 50MP Camera 12GB RAM Launched Sale From April 16 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X