Home
Mobile

ஏப்.10 சம்பவம் உறுதி.. 16GB ரேம்.. SONY பெரிஸ்கோப் கேமரா.. 100W சார்ஜிங்.. 6100mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சீன மார்கெட்டும் மிரளும்படியான ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கொண்ட மாடல்களாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (OPPO Find X8 Ultra) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் (OPPO Find X8s) ஆகியவை ஏப்ரல் 10ஆம் தேதி களமிறங்க இருக்கிறது. டிசைன், கலர் விவரங்கள் உறுதியாகிவிட்டன. இருப்பினும், முழு பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. இந்த ஒட்டுமொத்த பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா, ஃபைண்ட் எக்ஸ்8எஸ் டிஸ்பிளே (OPPO Find X8 Ultra, Find X8s Display): அல்ட்ரா மாடலில் 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டில்பிளேவில் கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு (OPPO Crystal Shield) பாதுகாப்பு வருகிறது.

ஏப்.10 சம்பவம் உறுதி.. 16GB ரேம்.. SONY பெரிஸ்கோப் கேமரா மாடல்கள்!

ஃபைண்ட் எக்ஸ்8எஸ் மாடலிலும் ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு பாதுகாப்பு கொண்ட 6.3 இன்ச் (2760 x 1256 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இரண்டு மாடல்களிலும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியமான அவுட்புட் கிடைக்கும்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா, ஃபைண்ட் எக்ஸ்8எஸ் கேமரா (OPPO Find X8 Ultra, Find X8s Camera): அல்ட்ரா மாடலில் சோனி எல்ஒய்டி 900 (Sony LYT 900) சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சோனி எல்ஒய்டி 700 (Sony LYT 700) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

ஏப்.10 சம்பவம் உறுதி.. 16GB ரேம்.. SONY பெரிஸ்கோப் கேமரா மாடல்கள்!

மேலும், சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த குவாட் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், சோனி எல்ஒய்டி 506 (Sony LYT 506) சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஹைப்பர் டோன் மற்றும் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மல்டி-ஸ்பெக்ஸ்ட்ரல் சென்சார் மற்றும் சூப்பர்-கிரிஸ்டல்லைன் ப்ளூ கிளாஸ் கிடைக்கிறது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது. இந்த மெயின் கேமரா மற்றும் டெலிபோட்டோ கேமராவில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. இதுவும் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டமாகவே இருக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த எக்ஸ்8எஸ் போன் கொடுக்கிறது.

ஏப்.10 சம்பவம் உறுதி.. 16GB ரேம்.. SONY பெரிஸ்கோப் கேமரா மாடல்கள்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா, ஃபைண்ட் எக்ஸ்8எஸ் சிப்செட் (OPPO Find X8 Ultra, Find X8s Chip): இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆனால், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா மாடலில் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் கிடைக்கிறது. அதுவே ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் 3என்எம் டைமன்சிட்டி 9400 பிளஸ் (Octa Core 3nm MediaTek Dimensity 9400+) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, 2 மாடல்களிலும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

ஏப்.10 சம்பவம் உறுதி.. 16GB ரேம்.. SONY பெரிஸ்கோப் கேமரா மாடல்கள்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா, ஃபைண்ட் எக்ஸ்8எஸ் பேட்டரி (OPPO Find X8 Ultra, Find X8s Battery): அல்ட்ரா மாடலானது பிரீமியமாக கிடைப்பதால், அதில் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6100mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு ஏற்ப கூலிங் சிஸ்டம் மற்றும் பேட்டரி டெக்னாலஜிகளை இந்த போனில் எதிர்பார்க்கலாம்.

ஃபைண்ட் எக்ஸ்8எஸ் மாடலில் பேட்டரி கேபாசிட்டி குறைவாக இருக்கிறது. இருப்பினும், ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் கிடைக்கிறது. ஆகவே, 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5700mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே, கேமரா மற்றும் சிப்செட் பர்ஃபாமென்ஸ்க்கு ஏற்ப பேக்கப் கிடைக்கிறது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா, ஃபைண்ட் எக்ஸ்8எஸ் ரேம், ஸ்டோரேஜ் (OPPO Find X8 Ultra, Find X8s RAM, Storage): அல்ட்ரா மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது. ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி உள்ளது.

ஏப்.10 சம்பவம் உறுதி.. 16GB ரேம்.. SONY பெரிஸ்கோப் கேமரா மாடல்கள்!

இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்களும் கிடைக்க இருக்கின்றன. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ராவில் ஹோசினோ பிளாக் (Hoshino Black), மூன்லைட் ஒயிட் (Moonlight White) மற்றும் மார்னிங் லைட் (Morning Light) கலர்கள் கிடைக்க இருக்கின்றன. ஆனால், ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனில் நான்கு கலர்கள் வெளியாக இருக்கின்றன.

ஆகவே, ஸ்ட்ர்ரி பிளாக் (Starry Black), செர்ரி பிளாசம் பிங்க் (Cherry Blossom Pink), ஐலேண்ட் ப்ளூ (Island Blue) மற்றும் மூன்லைட் ஒயிட் (Moonlight White) இருக்கிறது. மேலும், இரண்டு மாடல்களிலும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே சென்சார், டால்பி அட்மோஸ் போன்ற பிரீமியம் பீச்சர்கள் வருகின்றன.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா, ஃபைண்ட் எக்ஸ்8எஸ் விலை (OPPO Find X8 Ultra, Find X8s Price): இந்தியாவில் ஏற்கனவே வெளியான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ போனின் விலை ரூ. 99,999 ஆக இருக்கிறது. ஆகவே, இந்த ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ராவின் ஆரம்ப விலை ரூ.85,000 பட்ஜெட்டில் இருக்கலாம். ஃபைண்ட் எக்ஸ்8எஸ் போனின் விலை ரூ.46,971 பட்ஜெட்டில் தொடங்கலாம்.

Image Credits: @stufflistings (X)

Best Mobiles in India

English summary
OPPO Find X8 Ultra And Find X8s To Launch on April 10 in China Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X