Home
Mobile

அடுத்த மாசம் உறுதி.. வருகிறது புதிய ஒப்போ போன்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது ஆன்லைனில் இந்த போனின் அறிமுக தேதி கசிந்துள்ளது, அதன்படி அக்டோபர் 21-ம் தேதி இந்த புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும். கலர்ஒஸ் 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.

அடுத்த மாசம் உறுதி.. வருகிறது புதிய ஒப்போ போன்.. எந்த மாடல்?

அதேபோல் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 சீரிஸ் அறிமுக தேதி மட்டும் தான் கசிந்துள்ளது. விரைவில் இந்த போன்களின் அனைத்து முக்கிய விவரக்குறிப்புகளும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்27 5ஜி (OPPO F27 5G) ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ எப்27 5ஜி அம்சங்கள் (OPPO F27 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) உடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் ஒப்போ எப்27 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ எப்27 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக ஏஐ ஸ்டுடியோ (AI Studio), ஏஐ ஏரேசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 (AI Smart Image Matting 2.0) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்களுடன் ஒப்போ எப்27 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

அடுத்த மாசம் உறுதி.. வருகிறது புதிய ஒப்போ போன்.. எந்த மாடல்?

ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு 5000mAh பேட்டரி உடன் ஒப்போ எப்27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC fast charging)ஆதரவும் இந்த போனில் உள்ளது . மேலும் இந்த போன் ரூ.22,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

photo credit: oppo

Best Mobiles in India

English summary
Oppo Find X8 Series Launch Date Leaked Online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X