மார்கெட் மிரளுது.. QUAD கேமரா.. 50MP பெரிஸ்கோப்.. 120X டிஜிட்டல் ஜூமிங்.. 5910mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓப்போ கிரிஸ்டல் சீல்டு புரொடெக்சன் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 120X டிஜிட்டல் ஜூமிங், ஹசல்பிளாட் போர்ட்ராய்டு, டால்பி அட்மோஸ், டால்பி விஷன், 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5910mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ (OPPO Find X8 Pro) போன் வெளியாகி இருக்கிறது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ அம்சங்கள் (OPPO Find X8 Pro Specifications): இந்த ப்ரோ மாடலில் ஹசல்பிளாட் போர்ட்ராய்டு (Hasselblad Portrait) கொண்ட குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (QUAD Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி 3X டெலிபோட்டோ + 50 எம்பி 6X பெரிஸ்கோப் கேமரா வருகிறது.

மெயின் கேமராவில் சோனி லிடியா எல்ஒய்டி808 (Sony lytia LYT808) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் எஸ்5கேஜேன்5 (Samsung S5KJN5) வருகிறது. அதேபோல 3X டெலிபோட்டோவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாரும், 6X பெரிஸ்கோப் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சாரும் வருகிறது.
இந்த குவாட் கேமராவில் 120X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் டால்பி விஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் வருகிறது. இந்த ஓப்போ போனில் 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) மைக்ரோ கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பிரைட்ன்ஸ் உள்ளது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஓப்போ கிரிஸ்டல் சீல்டு புரொடெக்சன் (OPPO Crystal Shield Protection) கிடைக்கிறது. பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9400 3என்எம் எஸ்ஓசி சிப்செட் ( Octa Core Dimensity 9400 3nm SoC) வருகிறது.
பிரீமியம் மாடலாக வருவதால், கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது. இந்த ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. IP68 + IP69 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓப்போவில் 5910mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,615ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.82,675ஆகவும் இருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








