போடு.. OPPO-கிட்ட இருந்து இப்படி ஒரு போன்-ஆ.. 6.8-இன்ச் டிஸ்பிளே, 5700mAh பேட்டரி, 16GB ரேம், 1TB மெமரி!
அடடே ஒப்போ-கிட்ட இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போன் சீரீஸா என்று பலரையும் வியக்க வைத்த ஒரு சீரீஸ் என்றால் அது ஒப்போ பைண்ட் சீரிஸ் தான். முழுக்க முழுக்க பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களை வெளிக்கொண்டு வரும் இந்த சீரீஸின்கீழ் அடுத்த மாடல்கள் எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் (Oppo Find X8 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? இதோ விவரங்கள்:
ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும்? ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்த மாத இறுதியில், சரியாக அக்டோபர் 24 ஆம் தேதி அன்று அறிமுகமம் செய்யப்படும் என்று ஒப்போ நிறுவனம் அதிகார்பூர்மாக அறிவித்து உள்ளது.

ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸின்கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 (Oppo Find X8) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா (Oppo Find X8 Ultra) ஆகிய 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது முன்னதாக வெளியான ஒப்போ பைண்ட் எக்ஸ்7 சீரிஸில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்7 (Oppo Find X7) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவை (Oppo Find X7 Ultra) பின்பற்றலாம்.
ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஆனது லேட்டஸ்ட் சிப்செட் ஆன மீடியாடெக் டைமன்சிட்டி 9400 எஸ்ஓசி (MediaTek Dimenity 9400 SoC) உடன் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த சிப்செட் டைமன்சிட்டி 9300 சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட "வாரிசு" ஆகும். மீடியாடெக் டைமன்சிட்டி 9400 எஸ்ஓசி ஆனது TSMC-ன் இரண்டாம் தலைமுறை 3என்எம்ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் (second-generation 3nm fabrication process) கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபிளாக்ஷிப் சிப்செட், மீடியாடெக் டைமன்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) உடன் ஒப்பிடும்போது 35 சதவிகிதம் வேகமான சிங்கிள்-கோர் செயல்திறன் (single-core performance) மற்றும் 28 சதவிகிதம் வேகமான மல்டி-கோர் செயல்திறனை (multi-core performance) வழங்குவதாக கூறப்படுகிறது. இது அதன் முன்னோடியை விட 40 சதவிகிதம் அதிக ஆற்றல் திறன் (power-efficient) கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது BOE ஆல் தயாரிக்கப்பட்ட 6.5-இன்ச் 1.5கே டிஸ்பிளேவை (6.5-inch 1.5K Display) கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை இது 50-மெகாபிக்சல் Sony LYT-600 சென்சார் தலைமையிலான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,700mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் அல்லது 6.8-இன்ச் மைக்ரோ-கர்வ்டு பிளாட் டிஸ்பிளேவை (Micro-curved flat display) பெறலாம். இது 16ஜிபி வரையிலான LPDDR5T ரேம் மற்றும் அதிகபட்சமாக 1TB UFS 4.0 பில்ட்-இன் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன விலை அறிமுகம் செய்யப்படலாம்? எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பிட்டு சொன்னால் ரூ.54,990 க்கு வெளியாகலாம். ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.89,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








